சந்தேகம் சாமிக்கண்ணு தமிழகத்தில் 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங் கள் காலியாக உள்ளன. – தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன். ச.சா – உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா…?? * * * தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் – காங். பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. ச.சா – இப்பவே ஆறுதல்படுத்திக்க ஆரம்பிச்சுட்டீங்களே… முடிவு தெரிஞ்சு போச்சோ…?? * * * இதுவரை நடந்துள்ள ஒரே மாதிரியான குண்டுவெடிப்புகள் குறித்து துப்பு துலக்கப்படவில்லை – பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர். ச.சா – மாலேகாவ், மெக்கா மசூதி, ஆஜ்மீர் தர்கா, சம்ஜவுதா எக்°பிர°னு ஒரே மாதிரியா நடந்ததுல உங்க சகாக்கள்தான சிக்கி ருக்காங்க… அது துப்பு துலங்குனதா உங்களுக்குத் தெரியலையோ… * * * 2ஜி வழக்கில் உரிமம் ரத்து செய்யும் உச்சநீதிமன்ற ஆணையால் பாதிப்பில்லை – நாடாளுமன்றக்கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ. ச.சா – 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்துனால கூட பாதிப்பில்லைனு சொல்றவங்கதான நீங்க…?

Leave a Reply

You must be logged in to post a comment.