சந்தேகத்தின் நிழலில் ஆர்.கே.ஆர்.பள்ளி – தமிழக அரசின் விசாரணை தேவை ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரு மாணவர்கள் இறந்துள்ள சம்பவத்தால் உடுஒரு மாத இடைவெளியில் அடுத்த டுத்து இரு மாணவர்கள் இறந் துள்ள சம்பவத்தால் உடுமலை பல்லடம் சாலை ஏரிப்பாளையத் தில் அமைந்துள்ள ஆர்.கே.ஆர். மெட்ரிகுலேஷன் பள்ளி மீது சந் தேகத்தின் நிழல் படிந்துள்ளது. கடந்த ஜனவரி 19ம் தேதி இந்த பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவர் கிருஷ்ணகுமார் மர்மமான முறை யில் உயிரிழந்தார். இந்நிலையில் பிப்ரவரி 15ம் தேதி காலை 11ம் வகுப்பு மாணவர் அனூஜ் தூக்கிட்டு உயிரிழந்திருக்கிறார். இந்த இரு சம்பவங்களும் பெற்றோர்கள் மற் றும் உடுமலை வட்டார மக்கள் மத் தியில் அதிர்ச்சி அலைகளை ஏற் படுத்தியுள்ளன. ஏற்கனவே கிருஷ்ணகுமாரின் மரணம் மர்மம் நிறைந்ததாக உள் ளது. அவரது முகத்தில் அடிபட்டு மூக்கு எலும்பு மற்றும் மண்டை யோட்டில் விரிசல் ஏற்பட்டு மர ணம் நிகழ்ந்திருப்பதாக பிரேத பரி சோதனை அறிக்கையில் கூறப்பட் டிருந்தது. அவர் வராண்டாவில் ஓடி வரும்போது கீழே நிலைதடு மாறி விழுந்து இறந்ததாக பள்ளி நிர்வாகம் கூறியது. கிருஷ்ணகுமா ரின் பெற்றோரிடம் பள்ளி நிர்வா கம் “சமரசம்” பேசி இப்பிரச்சனை முடிக்கப்பட்டது. அந்த பிரச்சனையின்போதே பெற்றோர்களும், மாணவர்களும் சாலை மறியல் உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபட்டனர். இதைய டுத்து இங்கு பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தை நடத்தி பள்ளி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்து வதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த சம்பவத்துக்குப் பிறகு சற்றே ரக்குறைய ஒரு மாத காலம் ஆன நிலையிலும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்படவில்லை. ஒவ் வொரு முறையும் தேதி குறித்து விட்டு பின்னர் நிர்வாகம் அந்தக் கூட்டத்தை ஒத்தி வைத்து வந்துள் ளது. இந்நிலையில் தற்போது அனூஜ் ஆசிரியர் தாக்கியது குறித்து பகி ரங்கமாகவே பெயரைக் குறிப்பிட் டுக் கடிதம் எழுதி வைத்து தற் கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் பெற்றோர்களிடம் மட்டு மின்றி உடுமலை வட்டார சகல பகுதியினரிடமும் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உடுமலை, ஏரிப் பாளையம் வட்டார மக்களிடம் ஏராளமான தகவல்கள் உலவுகின் றன. குறிப்பாக “தற்போது வெளியே தெரிந்திருப்பதுதான் இந்த இரு சம்பவங்கள். ஆனால் இதுபோன்ற பல மாணவர்களின் சாவுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன”. இப்பள்ளி தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் இதுவரை 30க்கும் மேற் பட்ட மாணவர்கள் மர்மமான முறையில் இறந்திருப்பார்கள் என்று பொது மக்கள் பேசிக் கொள்கின்றனர். குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகுமார் இறந்த சம்பவத்தில் முண்டுவேலம்பட்டி யில் இருந்து அம்மாணவரின் உறவினர்கள் 300க்கும் மேற்பட் டோர் திரண்டு வந்து பிரச்சனை செய்தது தான் இது போன்ற விவ காரம் வெளிப்படையாகத் தெரிய வந்ததற்கு முக்கிய காரணமாகும். இல்லாவிட்டால் ஒவ்வொரு சம்ப வத்தின்போதும் பள்ளி மாணவன் வயிற்று வலியால் உயிரிழந்தான், உடல்நலக் கோளாறு என ஏதா வது ஒன்றைச் சொல்லி பிரச் சனையை நிர்வாகம் மூடி மறைத்து வந்தது. அத்துடன் மிகவும் முக்கிய மாக உள்ளூர் காவல்துறையினi ரயும் கவனிக்கும் விதத்தில் கவ னித்து இது போன்ற சம்பவங் களை மூடி மறைத்து வந்துள்ள னர். புதன்கிழமை அனூஜ் உடலை எடுத்துச் செல்ல காவல் துறையி னர் காட்டிய அவசரத்திலும் நிர் வாகத்தைக் காப்பாற்றுவதற்கான உள்ளூர் காவல் துறை அதிகாரி களின் விசுவாசமே மேலோங்கி நின்றது. பெரும்பாலும் வெளியூர் மாண வர்களே இங்குள்ள பள்ளி விடு தியில் தங்கிப் படித்து வரும் நிலை யில் வெளியூரில் இருந்து வரும் பெற்றோர்களும் வேறு வழியின்றி நிர்வாகத்தை எதிர்க்க முடியாமல் மௌனமாகி விடுவர். ஏன் இத்தகைய சம்பவங்கள் இப்பள்ளியில் மாணவர்கள் சாவு தொடர்பாக பொது மக்க ளிடம் உலவும் கருத்துக்கள் சற் றுக் கூடுதலாகத் தெரிந்தாலும் நிச் சயமாக இது போன்ற சம்பவங் களே நடக்கவில்லை என்று யாரும் மறுக்க முடியாது. பள்ளி நிர்வாகத் தின் அணுகுமுறைதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறு வதற்குக் காரணம் என்று மாண வர்களே கூறுகின்றனர். மெட்ரிகு லேஷன் மற்றும் பிளஸ் டூ அரசுப் பொதுத்தேர்வுகளில் 100 சதவிகி தம் தேர்ச்சி என்ற அடையாளத் தைப் பெறுவதற்காகவே மாணவர் களை கசக்கிப் பிழிகின்றனர். இப்பள்ளி விடுதியில் ஒரே நிபந்தனை மாணவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் படிக்கா மல் இருக்கக் கூடாது. தொடர்ந்து தேநீர் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தூக்கத்தை தொலைத் துப் படித்துக் கொண்டே இருங் கள் என்பது தான் பள்ளி விடுதியில் இருக்கும் நடைமுறையாம். வேறெங்குமே இல்லாத “சிக் ரூம்” (நோயாளி அறை) என்ற ஒன்றை இங்கு வைத்திருக்கின் றனர். மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் சாலையில் எதற்காக இது போல் தனி ஏற்பாடு என்பதே வியப் பாக உள்ளது. உடல்நலக் குறைவு என்றால் மருத்துவ வசதி செய்து தருவதும், கனிவான கவனிப்பும் தேவை. ஆனால் தனித்துப் பிரித்து வைப்பது என்பதே அவர்களை மனிதர்களாகப் பாவிக்காத பார் வைதான். நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறும் பள்ளி என்ற அடையா ளத்தை முன்வைத்தே கல்வி வியாபாரத்தில் நல்ல அறுவடை செய்து வந்திருக்கின்றது இந்த ஆர்.கே.ஆர்.பள்ளி. தங்கள் குழந் தைகள் எப்படியாவது நல்ல மதிப் பெண் வாங்கி உயர் கல்விக்குச் சென்றுவிட வேண்டும் என்ற பல பெற்றோரின் உந்துதல் காரணமாக இப்பள்ளிக்குள் அவர்களைத் தள் ளிவிடுகிறார்கள். அது கல்விச் சாலை என்பதை விட சிறைச் சாலை என்றே சொல்லலாம் என்று இப்பள்ளி மாணவர்கள் குமுறலு டன் கூறுகின்றனர். கல்வி குறித்த சரியான புரிதல் இல்லாத பெற்றோர்களின் மயக் கமே இந்த கல்வி வியாபாரியின் முதலீடாக இருக்கிறது. தற்போது இப்பள்ளியில் 2 ஆயிரம் மாண வர்கள் படித்து வருகின்றனர். எனவே பள்ளி நிர்வாகத்தின் வியா பார வெறியில் இன்னும் இளம் பிஞ்சுகளைப் பலிகடா ஆக்கும் நிலையைத் தொடர விடக்கூடாது. உடனடியாக தமிழக அரசு இப் பள்ளி நடைமுறை குறித்து நியாய மான விசாரணை மேற்கொள்ள வேண்டும். கல்வித்துறை, காவல் துறையில் லஞ்ச லாவண்யம் மூலம் வலுவான பிணைப்பை ஏற்படுத் திக் கொண்டு கல்வி வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கலாம் என இறுமாப்போடு செயல்படும் இந்த கல்வி வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாயிரம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டியது தமிழக அரசின் பொறுப்பு! வே.தூயவன்

Leave a Reply

You must be logged in to post a comment.