குமரி மீனவர்கள் 2 பேர் நடுக்கடலில் சுட்டுக்கொலை நாகர்கோவில், பிப்.16- குமரி மீனவர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் கேப்டனிடம் கடற்படை அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். மேலும், பலியானவர்களின் குடும்பத் திற்கு தலா ரூ.5 லட்சம் நிவா ரணம் வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. குமரி மாவட்டம் நித்திர விளை அருகேயுள்ள பூத் துறை பகுதியைச் சேர்ந்தவர் பிரடி. இவருக்கு சொந்தமான செயின்ட் ஆன்டனி என்ற விசைப்படகில் கடந்த 10 தினங்களுக்கு முன் கேரள மாநிலம் சக்திக் குளங்கரை என்ற இடத்தில் இருந்து பூத் துறையை சேர்ந்த பிரடி, மார்ட் டின், ஆன்டனி, இரயுமன் துறையை சேர்ந்த அஜீ° டிங்கு, கிளைமான்°, பிரான் சி°, அலெக்சாண்டர், கில் சிறியான், முத்தப்பன், ஜாண் சன், கில்லாரி, கொல் லம் பகு தியை சேர்ந்த செல° டின் என 12 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். புதனன்று மாலை கொல் லத்தை அடுத்த நீண்டகரை யில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே ஒரு சரக்குக் கப்பல் வந்துள்ளது. கப்பலில் இருந்தவர்கள் திடீ ரென விசைப்படகில் மீன் பிடித்து கொண்டு இருந்த மீன வர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படகை ஓட்டிச்சென்ற செல°டின் மற்றும் அருகில் இருந்த அஜீ° டிங்கும் பலியா கினர். இதனால் பீதிய டைந்த மற்ற மீனவர்கள் படகை கரைக்குத் திருப்பினர். இது பற்றி மாவட்ட ஆட் சியர், மீன்வளத்துறை இயக்கு நர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய கப்பலை மடக்கினர். அந்த கப்பல் இத்தாலி நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் ‘என்றிகா லக்சி’ என்பது தெரியவந்தது. அந்த கப்பலை கடற்படையினர் கொச்சிக்கு திரும்ப உத்தரவிட்டனர். இதை யடுத்து அந்த கப்பல் கொச்சி கொண்டு செல்லப்பட்டது. துப்பாக்கிச் சூடு குறித்து இத்தாலி கப்பலில் உள்ள கேப்டனிடம் கேட்ட போது, எங்கள் கப்பலுக்கு குறுக்கே திடீரென வந்த விசைப்படகை நாங்கள் கொள்ளை கும்பல் என நினைத்து துப்பாக்கியால் சுட்டோம் என்று கூறினார். இச்சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விபரம் அறிந்த மத்திய அரசு, தில்லியில் உள்ள இத் தாலி தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கிடையே பலியான 2 மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்தார். கொல்லம் மாவட்ட ஆட்சியர் தனது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 10 ஆயிரம் உட னடியாக வழங்கினார். துப்பாக் கிச் சூட்டில் பலியான அஜீ° டிங்குக்கு 2 தங்கைகள் உள் ளனர்.

Leave A Reply