கால் இறுதியில் இந்திய ஆடவர் அணி சீனாவின் மக் காவில் நடைபெ றும் தாமஸ் கோப்பை ஆட வர் பேட்மின் டன் போட்டிக ளின் கால் இறு திக்கு இந்தியா தகுதிபெற்றுள் ளது. உபர் கோப்பை மகளிர் போட்டியில் இந் தியா வெளியேற்றப்பட்டது. தாமஸ் கோப்பை சுழல் போட்டிகளின் கடைசிப் போட்டியில் இந்தியாவும் இந்தோனேசியாவும் மோதின. இந்தோனேசியா 3-2 என வென்றது. இக்குழுவில் முதல் இரு இடங்களைப் பெற்ற இந்தோனேசியாவும் இந்தியாவும் கால் இறுதிக்குத் தகுதிபெற்றன. ஆடவர் போட்டிகளில் இந்தியா முதல் போட்டியை தோற்றது. பி.காஷ்யப் 7-21, 15-21 என்ற கணக்கில் சைமன் சன்டோசோவிடம் தோற்றார். இரட்டையர் அணி, இத் தோல்வியைச் சமன் செய்தது. ருபேஷ்குமார்-சானவ் தாமஸ் ஆகியோர் 21-18, 21-16 என்ற கணக்கில் யுலி யாண்டோ சந்திரா-ஹென்ரா அப்ரிடா குணாவன் இணையை தோற்கடித்தனர். ஒலிம்பிக் சாம்பியன் டாபிக் ஹிதாயத், இந்திய வீரர் ஆனந்த் பவாரை 21-16, 21-13 என்ற செட்டுகளில் தோற் கடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அடுத்த இரட் டையர் போட்டியில் இந்தியாவின் அட்சய் திவால்கர்-பிர னவ் சோப்ரா இணை தோற்றது. கடைசி ஒற்றையர் போட் டியை ஆட வேண்டிய அவசியம் இல்லாத போதும் சுழல்போட்டிகளில் அனைத்து போட்டிகளும் நடத் தப்பட வேண்டும். இந்தியாவின் இளைய நட்சத்திரம் பி.சாய் பிரனீத் இந்தோனேசியாவின் டயோனிசியஸ் ஹயோம் ரும்பாகாவை 13-21, 21-15, 21-9 என வென்றார். மகளிர் போட்டியில் சானியா நேவால் ஆடிய போட்டி உட்பட ஐந்து போட்டிகளையும் இந்தியா தோற்றது. சீனா 5-0 என வென்றது.

Leave A Reply

%d bloggers like this: