காமன்வெல்த் ஊழல்: விசாரணை அறிக்கையை வெளியிட முடிவு புதுதில்லி: காமன்வெல்த் விளை யாட்டு ஊழல் தொடர்பாக விரிவான விசா ரணையை நடத்திய மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) பிரத்யேக அறிக் கையை வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையில் காமன்வெல்த் விளை யாட்டு ஏற்பாடு முறைகேடுகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஊழல் விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்தியாவில் 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை தலைநகர் தில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. நாட்டில், முதல் முறையாக நடந்த காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல்கள் நடந் துள்ளன. இந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தும் சிவிசி யின்அறிக்கை இறுதி நிலையில் உள்ளது. ஒரு மாத காலத்தில் அறிக்கை பூர்த்திய டையும். இந்த விளையாட்டுப் போட்டிக் கான ஆயிரக்கணக்கான பணிகளை அரசு கட்டுமானத்துறைகளும் நகர நிர்வாகமும் மேற்கொண்டன. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் நடந்த ஊழல் தொடர்பான அறிக்கை தயாராகி வருகிறது. அந்த அறிக் கை நிறை வடைய ஒரு மாதம் ஆகும் என ஊழல் தடுப்பு ஆணையர் ஆர்.ஸ்ரீகுமார் தெரிவித்தார். காமன்வெல்த் திட்ட விபரங் கள் மற்றும் முறைகேடுகள் குறித்து அறிக்கையில் தக வல்கள் இடம்பெற்றிருக்கும். ஊழல் தடுப்பு ஆணைய விசாரணை நிலை குறித்த விவ ரங்களும் அறிக்கையில் இடம் பெற்றி ருக்கும் என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: