கற்றதில் குறை மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி மருத்துவர் சிவபிரகாசம் தகவல் சிதம்பரம், பிப். 16 – கற்றதில் (டிஸ்லெக்கியா) உள்ள குறைகளை போக்க மாணவர்களுக்கு மாற்று முறையில் கல்வி கற்க பத்து மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளதாக இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் வி. சிவபிரகாசம் தெரிவித்தார். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் வி. சிவபிரகாசம் கூறியதாவது; டி°லெக்சியா என்பது கற்றதில் உள்ள குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சரியாக கற்க இயலாது. பதில் சொல்ல வரும் ஆனால் எழுத வராது, ஐகியூ இருக்கும் ஆனால் மதிப்பெண் பெற இயலாது. எழு தும் போது கையெழுத்து நன்றாக இருக்காது. இலக் கணப்பிழை அதிகமாக இருக்கும், வேகமாக எழுத வராது. இதனால் இவர்கள் வகுப்பிலும் வீட்டிலும் அவமானப் படுவார்கள் அடிவாங்குவார்கள். இவர்களுக்கு மாற்று முறையில் கற்றுக் கொடுத்தால் நன்றாக படிப்பார்கள். தமிழகத்தில் 10 விழுக்காடு மாணவர்கள் இந்த டி°லெக்சியா குறைபாடுடன் உள்ளார்கள். ஆனால் ஒரு விழுக்காடுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள் ளவர்களையும் கண்டுபிடித்து முறையான பயிற்சி அளித்து அதிகம் மதிப்பெண்கள் பெறவைத்து வாழ்க்கையில் ஒளி யேற்ற இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம் பணியாற்றி வருகிறது. இம்மாதம் இறுதியில் சென்னை, திருச்சி, கோயம் புத்துர், சிதம்பரம், மதுரை, சேலம் ஆகிய ஐந்து இடங் களில் மாணவர்களுக்கு டி°லெக்சியாவை ஆரம்பகட்டத் திலே கண்டுபிடித்து பயிற்ச்சி அளிக்கப்படும். மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு குறைந்த விலையில் டைப்பாய்டு ஊசி போடப்படும், ஜூன் மாதத்தில் சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: