ஜி.சுரேஷ் மனித உயிர்கள் மலிவானதா? பள்ளிக்கூடத்திற்கு தந்தையுடன் நடந்து செல்லும்போது ஜெரின் என்ற மழலையர் பள்ளி மாண வனை சிறுத்தை கழுத்தை கடித்து ரத்தம் உறிஞ்சி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வால் பாறையில் ஆறு சிறு குழந்தைகளை சிறுத்தை கடித்துக் கொன்றுள்ளது. மலை மாவட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளிகள் உள்ளிட் டவர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் வால் பாறை யில் யானை தாக்கி ஏழு பேர் பலி யாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத் தில் எட்டுபேர் யானைகளின் கோரத் தாக்குதலுக்கு ஆளாகி மாண்டு போயுள்ளனர். வனவிலங்குகளால் மக்கள் கொல்லப்படும்போது அரசாங்கம் ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குகிறது. அத்துடன் அவர் களின் கடமை முடிந்துவிட்டதாக கருதுகின்றனர். தமிழகத்தில் குரங்கு, மான், மயில், காட்டெருமை, கரடி, புலி , யானை உள்ளிட்ட வனவிலங்குக ளால் விவசாயப் பொருட்கள் நாச மாவதும் சில பகுதிகளில் விவசா யமே செய்யமுடியாத நிலையும் ஏற் படுகிறது. வன குற்றங்கள் குறைந்துவரு வதாக வனத்துறை அறிவித்துள்ளது. வன பாதுகாப்புச் சட்டம் கடுமை யாக இருந்தாலும் வனப் பொருட் களை கடத்துவதும் தீவிரமாக நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. வன உயிரினப் பொருட்களை கடத்துபவர் கள் சர்வதேச கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தங்களது கடத் தல் பணிகளை தடையின்றி செய்கி றார்கள். வனங்களில் வனம்சாராத நடவடிக்கைகள் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உள்காடுகளில் கஞ்சா பயிரிடுதல், வனவிலங்கு வேட்டை போன்றவை நிகழ்த்தும் மாபியா கும்பல் அதிகாரி களின் ஆதரவோடு செயல்படுகிறது. வனங்களில் வனவிலங்குக ளுக்குத் தேவையான தண்ணீர் மற் றும் உணவுப் பொருட்கள் குறையும் போதும் வேட்டைக்காரர்களின் துப் பாக்கிகளுக்கு அஞ்சியும் வன விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விவசாயத்தை அழிப்பதும், மனிதர் களை கொல்வதும் நிகழ்கிறது. ஏதோ ஓரிடத்தில் ஒரு காட்டு யானையோ, சிறுத்தையோ செத்துக் கிடந்தால் அதை தூக்கிப்பிடித்து வன விலங்குகளுக்காக எழுப்பப் படும் குரல்களும் சிந்தப்படும் கண் ணீரும் ஊடகங்களில் மிகப்பெரிய செய்தியாக வலம் வருகிறது. வனப் பாதுகாப்பு, வன உயிரினப் பாதுகாப்பு என்பவை குறித்து பேசுவதும், ஆர்ப் பரிப்பதும் ஒரு பேஷனாகவே மாறி யுள்ளது. உண்மையில் வன அழிப் பிற்கு காரணமாகிறவர்கள் வனத் தைப் பாதுகாப்பதை கடமையாக ஏற்று அதற்கு மக்கள் வரிப்பணத் தில் சம்பளத்தையும் பெற்று, தங்க ளது கடமையை செய்யாததோடு வனக் கொள்ளையர்களுக்கு துணை போகிற அதிகாரிகளே ஆவார்கள். வன விலங்குகள் சாகும்போது மக் களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துபவர்கள், வன விலங்குகளை பாதுகாக்கத் தவறிய அதிகாரிகளை ஏனோ கண்டுகொள்வதில்லை. வனவிலங்குகளின் இடத்தை மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்ட தனால் மனிதர் – விலங்கு மோதல் ஏற்படுகிறது என்றும் தாக்குதலுக்கு இரையானவர்கள்தான் குற்றவாளி கள் என்றும் பேசப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தேயிலைத் தோட்டங்களில் சமீப காலங்களில் தான் இத்தகைய கோரத் தாண்டவம் தலைவிரித்தா டுகிறது. திடீரென்று மனித உயிர்கள் வேட்டையாடப்படுவதற்கான காரணம் என்ன என்பதை சம்பந்தப் பட்டவர்கள் பரிசீலிக்கவேண்டாமா? சமீபத்தில் வால்பாறை நகரத் தின் மையத்தில் வட்டாட்சியர் அலு வலகத்திலிருந்தும் குன்னூர் அரு கிலும் கூடலூர் அருகிலும் கூண்டு களில் சிக்கிய சிறுத்தைகளை வனத்துறையினர் மீண்டும் அதே பகுதிகளில் விட்டுவிட்டனர். மனித ரத்தம் ருசித்த சிறுத்தைகள் மனிதர் களை தொடர்ந்து வேட்டையாடும் என்பது அனைவரும் அறிந்ததே. காலையில் கொழுந்து பறிக்கும் பணிக்குச் சென்ற தாய்மார்கள் மாலையில் யானை தாக்கி பிணமாக வீட்டிற்கு வரும்போதும், அவர் களின் குழந்தைகளை சீவி சீருடை அணிவித்து டாட்டா சொல்லி தந் தையின் கைபிடித்து பள்ளிக்கூடத் திற்கு வரும் வழியில் தந்தை யின் கண்முன்னே அந்த நான்கு வயது குழந்தையின் கழுத்தைக் கடித்து சிறுத்தை ரத்தம் குடித்த கோரத்தை யும், தாய் ஏஞ்சலிடமும் பணி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று யானை துதிக்கையால் தூக்கிவீசப் பட்டு உடல் சிதறி மரணமடைந்த மூன்று வயது குழந்தை பாபுவிடமும் இன்னும் இதுபோன்ற அகாலத்தில் மரணத்தை தழுவிய தொழிலாளர் களின் குடும்பத்தாரிடமும் இந்த சமூகம் என்ன சமாதானம் சொல்லப்போகிறது. வன விலங்குகள் வனத்தை விட்டு ஊருக்குள் நுழைவதை தடுப்பதென்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, வன விலங்குகளுக்கே பாதுகாப்பானது. காடுகளில் வன விலங்குகளுக்குத் தேவையான தண்ணீரை சேமிப்பது, உணவுக் குத்தேவையான தாவரங்களை வளர்ப்பது, வனக் கொள்ளையை தடுப்பது, வேட்டைக்காரர்களை விரட்டுவது போன்ற கடமைகளை வனத்துறை பொறுப்புணர்வோடு செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போது வழங் கும் சொற்பமான இழப்பீட்டை உயர்த்தி வழங்குவதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கி அவர்களின் எதிர்காலத்தை பாது காப்பதும், மனித நேயம் கொண்ட அரசாங்கத்தின் கடமையாகும். கட்டுரையாளர், அமைப்பாளர் தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழு (சிஐடியு)

Leave a Reply

You must be logged in to post a comment.