காசு இருந்தால் வாங்கலாம் தண்ணீர்! வானம் பொழிகிறது, ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நான் ஏன் தண் ணீருக்கு கொடுக்க வேண்டும் காசு? என்று விவசாயிகள் பொங்கி எழப் போகும் நாள் வெகு சமீபத்தில் வந்துவிட்டது. வானத்தில் இருந்து பொழியும் மழை, சூரியனில் இருந்து கிடைக் கும் வெப்பம், தவழ்ந்து வரும் தென்றல் போன் றவை இயற்கை நமக்கு கொடுத்த அருட் கொடையாகும். பணக்காரன் – ஏழை, படித்த வன் – படிக்காதவன், அந்த சாதி – இந்த சாதி, அந்த மதம் – இந்த மதம் என்று எந்த வேறு பாடும் பார்க்காமல், இயற்கை எல்லோருக்கும் சமமாக வழங்குவதுதான் மழை, காற்று, சூரிய வெளிச்சம் ஆகியவையாகும். இயற்கை பாகு பாடு இல்லாமல் இலவசமாக கொடுக்கும் இந்த சீதனங்களுக்கு, கட்டணம் என்று சொன்னால் அது நிச்சயமாக நியாயமாகாது. அப்படி இயற்கை வாரி வழங்கும் தண்ணீருக்கு கட் டணம் வசூலிப்பதோடும் மட்டுமல்லாமல், அதை விநியோகிக்கும் பொறுப்பையும் ஒரு அமைப்பிடம் வழங்க மத்திய அரசாங்கம் எண் ணியுள்ளது. இப்படி , பல அம்சங்களைக் கொண்ட ‘தேசிய நீர் கொள்கையை’ மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது, ஜனவரி 31ம் தேதி “வரைவு தேசிய நீர் கொள்கை” மத்திய நீர்வள அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேசிய நீர் கொள் கையில் என்னென்ன அம்சங்கள் இருக் கிறது? என்பது சாதாரண குப்பனுக்கும், சுப்ப னுக்கும் கண்டிப்பாக தெரிந்தாக வேண்டும். நிலத்தடி நீரின் மீது, அந்த நிலத்தின் சொந்தக் காரனுக்கு உரிமை இல்லை என்பது இந்த புதிய கொள்கையின் ஒரு அம்சமாகும். குடி தண்ணீர் மற்றும் சுகாதார பணிகள் தவிர, மற்ற அனைத்து சேவைகளுக்கும் தண்ணீர் வேண் டுமென்றால், அது காசு கொடுத்து வாங்கும் ஒரு பொருளாகத்தான் கருதப்படும் என்கிறது இந்த புதிய கொள்கை. இதை விளங்கச் சொல்ல வேண்டுமென் றால், இனி குளத்துநீரையோ, ஆற்றுநீரையோ, ஏரித் தண்ணீரையோ ஒரு விவசாயி பயன் படுத்த வேண்டுமென்றால் பணம் கொடுத்துத் தான் வாங்கவேண்டும். இந்த கட்டணத்தை யெல்லாம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போல, நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அந்த ஆணையம்தான் நிர் ணயிக்குமாம். மொத்தத்தில், பணம் வைத் திருக்கும் விவசாயிதான் தாராளமாக தண் ணீரை வாங்க முடியும். தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல், வாழை, கரும்பு போன்ற பணப்பயிர்களை பயிரிட முடியும். ஐயோ பாவம்! விவசாயி இருக்கிறானே, அவன் தண் ணீர் வாங்க பணம் இல்லாமல், ஒன்று, நிலத்தை தரிசாக போடவேண்டிய நிலைமை ஏற்படும் அல்லது தண்ணீர் இல்லாத மானா வரி பயிர்களைத்தான் பயிரிடமுடியும். என்ன காரணமோ தெரியவில்லை? இந்த பெரிய ஆபத்தை அரசியல் கட்சிகள் உள்பட யாரும் சரியாக கண்டுகொள்ளவில்லை. தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செயலாளர் கனகராஜ் மட்டுமே, இந்த ‘வரைவு தேசிய நீர் கொள்கை’ யின் பாதிப்பு பற்றி ஒரு விவரமான அறிக்கையை வெளியிட்டு, அந்த பகுதி மக்களிடம் விவ சாயிகளுக்கு வரப்போகும் ஆபத்தை விளக்கி யுள்ளார். இந்த வரைவு தேசிய நீர் கொள்கை யின் மீது பிப்ரவரி 29ம் தேதி வரை பொது மக்கள், சமுதாய அமைப்புகள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய நீர்வள அமைச் சகம் அறிவித்துள்ளது. இதுபோன்ற கொள் கைகளின் மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கும் முன்பு, இப்படி பொதுமக்களின் கருத்து கேட் பது வழக்கம். சரியான முறையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவில்லை யென்றால், இதையெல்லாம் பொதுமக்கள் ஏற் றுக்கொண்டதாகக் கருதி, சட்டம் வந்துவிடும். எனவே, இந்த வரைவு தேசிய நீர் கொள்கை யின் மீது ஒவ்வொரு அரசியல் கட்சியும், என்ன கொள்கையை கொண்டிருக்கிறது? என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? எந் தெந்த பிரிவு மாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்பதை மக்களுக்கு தெரி வித்தாக வேண்டும். மத்திய அரசாங்கமும், மக்கள் தங்கள் ஆட்சேபனைகளையும், கருத் துக்களையும் எங்கு தெரிவிக்க வேண்டும்? என்பதை விளக்கமாக அறிவிக்க வேண்டும். கனகராஜ் போன்ற அரசியல் தலைவர்கள் இந்த விஷயத்தில் இன்னும் ஆழ்ந்து ஆராய்ந்து சாதக, பாதகங்களை மக்களுக்கு விளக்க வேண்டும். நன்றி: தினத்தந்தி (16.2.2012) தலையங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.