‘ஒவ்வொரு நாளும் 9 கோடி லிட்டர் நீரை உறிஞ்சும் ராட்சத மோட்டார்கள்’ தூத்துக்குடி, பிப். 16- தெய்வச்செயல்புரம், பொட்டலூரணி, திருவேங் கிடபுரம் ஆகிய கிராமங் களில் உள்ள விவசாயி களின் விளை நிலங்கள் 915 ஏக்கரை போலி பட்டா மூலம் மோசடி செய்த செல் வம் மற்றும் அவரது கூட் டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர் வாகத்தை வலியுறுத்தி, தூத் துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட ஊர் பொது மக்கள் வியாழ னன்று அடையாள உண் ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தை துவக்கி வைத்து, மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம் எல்ஏ பேசினார். அப் பொழுது, இந்த மோசடி யில் ஈடுபட்டவர்களை காவல்துறை பட்டவர்த்தன மாக பாதுகாக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் கள் மீதான தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நட வடிக்கை எடுக்க தவறினால், மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு வலுவான முற் றுகை போராட்டம் நடை பெறும் என்று எச்சரித்தார். தெய்வச்செயல்புரத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 915 ஏக்கர் விவசாய நிலங்கள் போலி பட்டா மூலம் மோசடியாக பட்டா போடப்பட்டுள் ளது. இந்த போலி பட் டாவை ரத்து செய்து அதன் உரிமையாளர்களுக்கே மீண்டும் பட்டா வழங் கிடவேண்டும். இது சம்பந் தமாக சட்டமன்றத்தில் நாங்களும், புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் ஒட் டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான கிருஷ்ணசாமியும் முதல் வரிடம் எடுத்து கூறினோம். அவர் வருவாய்த்துறை அமைச்சரிடம் கூறி நடவ டிக்கை எடுப்பதாக கூறியுள் ளார் என்று பாலகிருஷ் ணன் தெரிவித்தார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குவது தாமிரபரணி ஆறாகும். இதை நம்பி 46 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள் ளன. இவற்றிற்கு ஸ்ரீவை குண்டம் அணை நீர் பயன் படுத்தப்படுகிறது. இங்கு ராட்சத மோட்டார்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 9 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்வதால் விவ சாயிகளின் நிலைமை கேள் விக்குறியாகி உள்ளது. ஏப் ரல், மே மாதங்களில் கடும் வறட்சி ஏற்படும். ஆகவே, தொழிற்சாலைகள் கடல் நீரை நன்னீராக மாற்றி பயன்பாட்டுக்கு உபயோ கப்படுத்திக் கொள்ள வேண் டும். ஊர் மக்களோ, நக ராட்சி, ஊராட்சி நிர்வாக மோ இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது. ஆகவே மத்திய-மாநில அர சுகளின் நீராதார கொள்கை களின்படி குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும் என்றும் கே.பாலகிருஷ் ணன் வலியுறுத்தினார். இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக் குடி மாவட்டச்செயலாளர் கே.கனகராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனி வாசன், மாவட்ட குழு உறுப்பினர் சங்கரசுப்பு, மாரியப்பன், அப்பாகுட்டி, நம்பிராஜன், கந்தசாமி, ராகவன், கீழவள்ளநாடு ஊராட்சிமன்றத் தலைவர் சுரேஷ்காந்தி, எல்லை நாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கெங்கன், துணைத் தலைவர் பெரு மாள், செந்தட்டியாபிள்ளை, தூத்துக்குடி மாநகர செய லாளர் அர்ச்சுணன், மாநக ரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சங்கரன், இந் திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர செயலாளர் முத்து, முனீ° உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: