ஊராட்சி அளவில் முகாம் நடத்தி அடையாளச் சான்று வழங்குக! மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை சென்னை, பிப். 16- கிராம ஊராட்சி அள வில் முகாம் நடத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளி களுக்கு அடையாளச் சான்று நேரில் வழங்க உரிய திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்று சங்கத் தின் மாநிலக்குழு கூட்டம் வேண்டுகோள் விடுத்துள் ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங் கத்தின் மாநிலக்குழு கூட் டம் சென்னையில் பிப்ரவரி 10 அன்று மாநிலத்தலைவர் பா.ஜான்சி ராணி தலைமை யில் நடைபெற்றது. சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சங்கத்தின் வட சென்னை மாவட்ட பொருளாளராக பணியாற்றிய எ°.புவனே° வரனுக்கு அஞ்சலி செலுத் தியபின் கூட்டம் துவங் கியது. மாநிலக்குழு உறுப் பினர் உ.வாசுகி, நாட்டு நடப்பும் மாற்றுத் திறனாளி களும் என்கிற தலைப்பில் பேசினார். அரசின் தவறான பொருளாதார கொள்கை கள் எவ்வாறு மாற்றுத் திற னாளிகளையும் பாதிக்கிறது என்பதையும் மாற்றுத் திற னாளிகள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக மட்டு மல்லாமல் பொது கோரிக் கைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய அவ சியத்தையும் எடுத்துரைத் தார். மாநிலச் செயலாளர் எ°. நம்புராஜன் வேலை அறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். கிராமப் பஞ்சாயத்து அளவில் முகாம்களை நடத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் அடை யாளச்சான்று நேரில் வழங்க உரிய திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். செயல்படாமல் கிடக்கும் நலவாரியத்தைச் செயல் படுத்த வேண்டும். மாநில மற்றும் மாவட்ட ஒருங் கிணைப்புக் குழுக்களை முறையாக அமைத்துச் செயல்பட வேண்டும் என் பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை மாநிலத் துணைத்தலைவர் தே.லட்சுமணன் முன் மொழிந்து பேசினார். சந்தா சேர்ப்பு சங்கத்தின் சார்பில் துவக்கப்பட உள்ள “ஊன முற்றோர் உரிமைக்குரல்” காலாண்டிதழ் பத்திரிகை சந்தா சேர்ப்பு இயக்கம் மாநிலம் முழுவதும் வெற்றி கரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் ராணி பேட்டையை அடுத்த புளி யங்கன்னு கிளையின் தலை வர் ஆர்.லக்ஷ்மி, தனது சொந்த முயற்சியில் 92 சந்தாவை சேர்த்து, வேலூர் மாவட்டம் சார்பாக சேர்த்த 102 சந்தாக்களுக் கான தொகை ரூபாய் 5100ஐ, மாநிலத்தலைவர் பா.ஜான்சி ராணியிடம் பலத்த கர கோஷத்திற்கு இடையே வழங்கினார். அவர் போலி யோவால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செய லில்லாதவர் என்பது குறிப் பிடத்தக்கது. அவரின் முயற்சி மற்ற அனைவருக் கும் எடுத்துக்காட்டாகவும் உற்சாகமூட்டுவதாகவும் அமைவதாக சந்தாக்களைப் பெற்றுக்கொண்ட மாநி லத்தலைவர் ஜான்சி ராணி குறிப்பிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: