உலகத் தொடர் ஹாக்கிக்கு அங்கீகாரம் இல்லை இந்திய ஹாக்கி அமைப்பு (ஐஎச்எப்) நிம் பஸ் தொலைக்காட்சி நிறு வனத் துடன் இணைந்து நடத் தும் உலகத்தொடர் ஹாக்கி போட்டிகளை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இப் போட்டியில் பங்கேற்கும் பதிவு செய்யப்பட்ட வீரர் களைக் கண்காணிக்கப் போவதாகவும் அது அறி வித்துள்ளது. சர்வதேச ஹாக்கி அமைப்பு (எப்ஐஎச்) இந் தியா ஹாக்கி என்ற அமைப்பை அங்கீகரித்துள் ளது. ஐஎச்எப் ஒரு அங்கீகா ரம் பெறாத அமைப்பு என் றும் அது நடத்தும் போட் டிகளில் பதிவு செய்யப் பட்ட வீரர்கள் ஆடக்கூ டாது என்றும் எப்ஐஎச் முன்பு கூறியது. ஐஎச்எப் தற் போதும் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. எப்ஐஎச் நிலைபாடு தெளிவானது. சர்வதேச போட்டிகள் இல்லை என் றால் உலகத்தொடர் ஹாக்கி சுழல் போட்டிகளை நடத்த லாம் என்று புதுதில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அடுத்த ஆறு ஏழு மாதங்க ளுக்கு போட்டி அட்ட வணை இறுக்கமாக உள் ளது என்று எப்ஐஎச் தலைமை நிர்வாகி கெல்லி பேர்வெதர் புதுதில்லியில் கூறினார். ஐஎச்எப் ஆதரவுடைய உலகத்தொடர் ஹாக்கி போட்டிகளில் ஆடும் பதிவு பெற்ற வீரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரிடம் நிருபர் கள் கேட்டனர். எப்ஐஎச் நிகழ்வுகளைக் கண்காணிக் கும். எப்ஐஎச் அமைப்பின் சட்டங்களும் விதிகளும் தெளிவாக உள்ளன என் றும் அவர் கூறினார்.

Leave A Reply