ஈரான்: மூன்று அணுசக்தி திட்டங்களை அகமதி நிஜாத் தொடங்கிவைத்தார் டெஹரான், பிப். 16- ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் மூன்று புதிய அணுசக்தி திட்டங்களை புதன்கிழமையன்று தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சி நாடு முழுவதும் தொலைக்காட்சியில் காட் டப்பட்டது. டெஹ்ரானில் உள்ள ஈரானிய அணு அமைப்ப கத்தில் ஈரானின் சுய தயாரிப் பான அணு எரிபொருள் கம்பியொன்று மருத்துவ அணு உலையில் சொருகப் படுவதை அகமதி நிஜாத் நேரில் பார்வையிட்டார். மத்திய ஈரானில் உள்ள நடான்ஸ் அணு உலையில் இரண்டு புதிய திட்டங் களை வீடியோ கான்பெ ரென்சிங் மூலமாக அவர் தொடங்கி வைத்தார். நடான்ஸ் உலை இரு பது விழுக்காடு யுரேனியச் செறிவூட்டலைச் செய்யும் திறனுடையதாக மாறியுள் ளது. முந்தைய மாதிரிகளை விட அதிவேகமாக செறி வூட்டலை நடத்தக்கூடிய சென்ட்ரிப்யூஜை அந்த உலை பயன்படுத்தும். இந்த விழாக்களில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சலேஹி, அணுசக்திதலை வர் முகமது அப்பாஸி ஆகி யோர் கலந்து கொண்டனர். க்யோம் மாகாணத்தில் போர்டோ எனுமிடத்தில் புதிய செறிவூட்டல் மையம் திறக்கப்பட்டதை அரசு தொலைக்காட்சியில் காட்டவில்லை. டெஹ்ரான் அணு உலை 1967ல் நிறுவப்பட் டது. இதற்குரிய எரிபொரு ளை முதலில் அர்ஜென் டினா அளித்தது. சில ஆண்டுகளுக்குமுன் அது நின்றுவிட்டது. பின்னர் பிரான்சும் ரஷ்யாவும் அளித்து வந்தன. 2009ல் சர்வதேசத் தடையின் கீழ் அதுவும் நிறுத்தப்பட்டது. பின்னர் தேவையான அணு எரிபொருளை ஈரானே தயாரிக்கத்தொடங்கிவிட்டது. யுரேனியத்தை 20 விழுக்காடு செறிவூட்டியபின் அதை எரிபொருளாக ஈரான் மாற் றுகிறது. அணுமின் உற்பத் திக்கும் அணு ஆயுத உற்பத் திக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முக்கிய இடு பொருளாகும். சர்வதேசத் தடைகளால் ஈரானின் தொழில்நுட்ப முன்னேற்றமும் அணு திட்ட மேம்பாடும் நின்று விடவில்லை என்று புதிய திட்டங்கள் தொடக்க விழா சர்வதேச உலகுக்கு உணர்த் துகின்றன. சர்வதேச தடை களால் உள்நாட்டில் ஏற் பட்டுவரும் நெருக்கடியை சர்வதேசத்தின் கவனத்தி லிருந்து திருப்பவே இவ் விழாக்கள் நடத்தப்பட்ட தாக அமெரிக்கா கூறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: