இருளில் தள்ளிய ஆட்சியாளர்களைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் திருப்பூர், பிப்.16- தமிழக மக்களையும், தொழில், விவசாயம் உள் ளிட்ட அடிப்படைத் துறை களையும் இருளில் தள்ளி தவிக்க விட்டுக் கொண்டி ருக்கும் ஆட்சியாளர் களைக் கண்டித்து திருப் பூரில் வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத் தினர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் வடக்கு ஒன்றியச் செயலாளரு மான பி.ராஜூ தலைமை வகித்தார். இதில் மத்திய, மாநில அரசுகளின் தாரா ளமயக் கொள்கைகளால் மின்சாரம் வழங்கும் பொறுப்பை தனியார் கைகளுக்குத் தாரை வார்த்து ஒட்டுமொத்த தமிழக மக்கள் வாழ்வை யும் இருளில் தள்ளியதாக மத்தியில் ஆளும் காங்கி ரஸ் திமுக ஆட்சியாளர் களையும், மாநிலத்தை ஆளும் அதிமுக ஆட்சியா ளர்களையும் கண்டித்து தலைவர்கள் உரையாற் றினர். கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் எம். ராஜகோபால், தெற்கு ஒன் றியச் செயலாளர் கே. உண்ணிகிருஷ்ணன், வடக்கு மாநகரச் செயலா ளர் என்.கோபாலகிருஷ் ணன், வேலம்பாளையம் நகரச் செயலாளர் கே.ரங்க ராஜ் ஆகியோர் இதில் உரையாற்றினர். பெண்கள், குழந்தை கள் உள்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைகளில் மெழுகுவர்த்தி யுடன் முழக்கங்கள் எழுப் பினர். பெதப்பம்பட்டியில் ஆர்ப்பாட்டம் மின்வெட்டைப் போக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா குழு சார்பில் வியாழக் கிழமை காலை பெதப்பம் பட்டி நால் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு கமிட்டி உறுப் பினர்பி.செல்லமுத்து தலைமை வகித்தார். தாலு கா செயலாளர் வெ.ரங் கநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.சசிகலா, கமிட்டி உறுப்பினர் காளி முத்து, சுந்தர்ராஜ், தங்க வடிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியு றுத்தி உரையாற்றினர். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: