இந்திய ஹாக்கி அணிகள் ஒலிம்பிக் தகுதி பெறும் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் 2012 ஒலிம் பிக் போட்டிகளுக்கு தகுதிபெறும் என்று இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜோஸ் பிராசா நம் பிக்கை தெரிவித்தார். இந்திய ஆடவர் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜோஸ் பிராசா 2010 ஆசிய போட்டிகள் முடிந்தவுடன் நீக் கப்பட்டார். உக்ரைன் மகளிர் அணியின் ஆலோசகராக அவர் புதுதில்லி வந்துள்ளார். புதுதில்லியில் நடைபெறும் தகுதிப்போட்டிகளில் உக்ரைன் பங்கேற்கிறது. இந்தியா ஆடவர் அணி நூறு விழுக்காடு தகுதிபெறும் வாய்ப்புள்ளது. எளிய போட்டிகளை தோற்கும் போக்கு அதனிடம் உள்ளது. ஆயினும் இறுதிப்போட்டியில் வெல் வதுதான் குறிக்கோள். இந்தியா தகுதிபெறும் என்று உறுதி யாக உள்ளேன் என்று ஜோஸ் பிராசா கூறினார். இந்திய மக்களின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. நிச் சயம் அது அவர்களுக்குக் கிடைக்கும். இந்திய வீரர்களை ஹோட்டலில் சந்தித்தேன் என்றும் அவர் கூறினார். அவர் விலகியபின் அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். இந்திய மகளிர் அணியைப் பற்றி அவர் உயர்வாகப் பேசினார். காமன்வெல்த், ஆசிய போட்டிகளில் அவர்க ளின் ஆட்டத்தைப் பார்த்தேன். ஆடவர் அணி போல் தனிப்பட்ட திறமைகள் அவர்களிடம் உள்ளன. மற்ற அணிகளோடு ஒப்பிடுகையில், அவர்கள் மிகவும் திறமை யானவர்கள். தென் ஆப்பிரிக்காவை வென்று இரண்டா வது முறையாக (1980ல் முதல்முறை) இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் தகுதிபெறும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறி னார்.

Leave A Reply