அந்தியூர்: அடிப்படை வசதிகளை மேம்படுத்திடுக! மார்க்சி°ட் கட்சியினர் பாடைகட்டி ஆர்ப்பாட்டம் ஆந்தியூர், பிப்.16- அந்தியூர் பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்ப டுத்தக்கோரி மார்க்சி°ட் கட்சியின் சார்பில் பாடைகட்டி ஊர்வலம் சென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூர் காந்தி நகர் பகுதியிலிருந்து துவங்கிய ஊர்வலம் பல்வேறு வழி யாக சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சி°ட் கட்சியின் கள்ளிமடை குட்டை கிளை செயலாளர் ஆர்.கணேசன் மற்றும் கு.பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், கட்சியின் அந்தியூர் தாலுகா செயலாளர் எ°.வி. மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிசாமி, தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முனுசாமி, கட்டுமான தொழிலாளர் சங் கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். இதில் காந்திநகர், கள்ளிமடைக்குட்டை, இட்டரைகல், விலாங்குட்டை ஆகிய பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை மேம்படுத்தி, புதியதாக தார்சாலை அமைத்திடல் வேண்டும். கிணத்தடி பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருக்க வனக்குழு மூலம் கட்டப்பட்ட வீடுகளை மலைவாழ் மக்களி டம் உடனடியாக ஒப்படைத்தல் வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் த.வெங்கடாசலம், க.சர° வதி மற்றும் உ.செந்தில் குமார், கு.முருகேசன், எ°.ராதா உள்ளிட்ட கட்சியின் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: