25 கோடி டன் உணவுதானிய உற்பத்தி : பிரதமர் பெருமிதம் புதுதில்லி, பிப். 15 – இலக்கு அளவை கடந்து 25 கோடி டன் உணவு தானிய உற்பத்தியை இந்த ஆண்டு எட்டுகிறது என நாம் பெருமைப்படும் வகையில், விவசாயிகள் சாதனை படைத்திருக்கிறார்கள். இருப்பினும் நாம் நீண்டதூரம் செல்ல வேண்டி உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். தலைநகர் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த கருத்துப்பட்டறை நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்ற, மன்மோகன் சிங் பேசுகையில் தானிய உற்பத்தி அதிகரித்துள்ள போதும், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் விலங்குகள் உற்பத்தி பொருட்கள் தேவை மிக வேகமாக அதிகரித்துள்ளது என்றார். வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கருத்துப்பட்டறையில் குறிப்பாக, மானா வாரிப்பயிர்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, குடியரசுத் தலைவர் மேற்கொண்ட பயிற்சியில் நடந்த கருத்துப்பட்டறையில் பிரதமர் மேலும் பேசுகையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 50 லட்சம் டன் கூடுதலாக உணவுதானிய உற்பத்தி கிடைத்துள்ளது. பருத்தி உற்பத்தி 3 கோடியே 40லட்சம் பேல் அளவை எட்டுவதாக உள்ளது. தற்போதைய மதிப்பீட்டின்படி இது, புதியச் சாதனை என்று பாராட்டினார். பண்ணையார்கள் மற்றும் சில்லரை விலை இடையே பெரிய இடைவெளி காணப்படுகிறது. அறுவடைக்குப் பின்னர், விலை நிர்ணயத்திலும் பிரச்சனை உள்ளது. வேளாண் சந்தை முறையில், அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்ய, நாம் கவனம் செலுத்த வேண்டும். 2020 -21ம் ஆண்டு இந்திய உணவு தானிய உற்பத்தி 2 சதவீதமாக இருக்கவேண்டும். ஆனால், நாட்டில் தற்போது ஒரு சதவீத தானிய உற்பத்தியே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநர்கள் கொண்ட குழுவை குடியரசுத் தலைவர் நிய மித்துள்ளனர். கருத்துப்பட்டறை கூட்டத்தில் குடியர சுத் தலைவர் பிரதிபா பாட்டீல், 20 மாநில ஆளுநர்கள், 8 மத்திய அமைச்சர்கள், 5 மாநில முதல்வர்கள், 37 வேளாண் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: