14 வருட போராட்டம் முடிவுக்கு வந்தது சிஐடியு முயற்சியால் தொழிலாளருக்கு நஷ்ட ஈடு ரூ.10 லட்சம் கிடைத்தது விருதுநகர், பிப். 15 – விசைத்தறி தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை ரூ.10 லட்சம், சிஐடியுவின் இடைவிடாத முயற்சியால் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தில் விசைத்தறி கூட்டுறவு மில் 1982 ல் துவங்கப்பட்டது. நிர்வாகச் சீர்கேட்டால் 1998 ஆம் ஆண்டு மூடப் பட்டது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகை, 3 மாதச் சம்பளம், கிராஜூ விடி, கருணைத் தொகை போன்றவை தரப்பட வில்லை. இதனை எதிர்த்து சிஐடியு தலைமையில் அனைத்து சங்கங்களும் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இறுதியாக கடந்த ஜனவரி 24 ஆம் தேதி குடும்பத்துடன் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த் தைக்கு அழைத்தனர். முடி வில் அனைவருக்கும் சேர வேண் டிய நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்குவதாக உறுதிய ளித்தனர். அதன்படி பிப்ரவரி 13 ம் தேதி அதிகாரிகள் குழு தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பாக்கித் தொகையை உரிய நஷ்ட ஈட்டுடன் வழங்கினர். மொத்தமுள்ள 110 தொழிலாளர்களுக்கு சுமார் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது, இது சிஐடியுவின் தொடர் போராட்டத்திற்கும், தொழி லாளர்களின் விடாப் பிடியான போராட்டத்திற்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றியாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.