நாமக்கல்: வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் உண்ணாவிரதம் நாமக்கல், பிப். 15- தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசி கள் நாமக்கல்லில் நக ராட்சி திருமண மண்ட பம் அருகில் உண்ணாவிர தப் போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் நாமக்கல் அருகே கொண்டி செட்டிபட்டியில் 1996 ம் ஆண்டு குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகள் கட்டப்பட்டது. 2006ம் ஆண்டு வரை பெரும்பா லான வீடுகள் விற்கப்பட வில்லை. முறையான பரா மரிப்பு இல்லாததால் கதவு, சன்னல் மற்றும் கட்டி டங்கள் பழுதடைந்து காணப்பட்டன. இந்நிலையில் வீட்டின் விலையை ரூ.1லட்சத்து ஒரு ஆயிரமாக குறைத்த னர். இதனையடுத்து சாதா ரண ஏழை, எளிய மக்கள் மாத தவணையிலும், ஒரு சிலர் முழு தவணையும் ஒரே சமயத்தில் செலுத்தி வீடுகளை வாங்கி குடி யேறினர். பராமரிக்கப் படாத வீடுகளுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பராமரிப்புக் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டன. இத னைத் தொடர்ந்து பய னாளிகள் அனைவரும் முழுத் தவணையும் செலுத்தி விட்டதால் கிரையப் பத்திரம் வழங்கப்படுகிறது என விளம்பரம் செய்யப் பட்டது. கிரையப்பத்திரம் பெற வந்தவர்களை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சம் வரை கொடுத்தால் தான் கிரையப்பத்திரம் கொடுக்க முடியும் என திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் ஏமாற்றம டைந்த பயனாளிகள் அதி காரிகளிடமும், ஆட்சி யாளர்களிடமும் பல முறை மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லாத தால் கொண்டிசெட்டி பட்டி வீட்டு வசதி வாரிய குறைந்த வருவாய் பிரிவி னர் நலச்சங்கத்தின் சார் பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சங்கத் தலைவர் குலாப் ஜான் தலைமையில், செய லாளர் மோகன், பொருளா ளர் ரவிசந்திரன், துணை தலைவர் பால்ராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட போராட்டத் தில் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ப.ராமசாமி, வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர் சங்க மாநில நிர்வாகி மேஜர் ராமசாமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.