விக்கலைத் தவிர்க்கலாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் விக்கல்கள் ஏராள மான முறை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் சொல் கிறார்கள். தொடர்ந்து சிரிப்பதால்கூட விக்கல் ஏற்படும் என்று கூறும் ஆய்வாளர்கள், மூச்சையடக்கி, பின்னர் நிதானமாக வெளியிடுவதன் மூலம் விக்கல்களை நிறுத்த முடியும். இடைவெளியில்லாமல் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் ஆய் வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். வேறு சில பிரச்ச னைகளுக்கு அறிகுறியாகவும் விக்கல் இருக்கலாம் என்று கூறும் பிரிட்டனைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்கள், மனரீதியாகவும் விக்கல் பற்றிய நினைவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.