திருப்பூர் வாலிபால் போட்டி : டி-செட் அணி கோப்பையை வென்றது இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விளையாட்டுக்கழகம் சார்பில் திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் கடந்த பிப் ரவரி 11,12 தேதிகளில் மாவட்ட அள விலான கைப்பந்து போட்டி நடை பெற்றது. இந்தப்போட்டியில் 23 அணி கள் பங்கேற்றன. இப்போட்டிகளை மாவட்ட கைப்பந்து கழகத்தின் சேர் மேன் அரிமா ஜீவா னந்தம்,தலைவர் இராமலிங்கம் (எ) கே.ரவி, அரிமா ஆர். நாகராஜ், வாலிபர் சங்க விளையாட்டுக் கழக நிர்வாகிகள் சபுரா செல்வம், சுந்தரம், மார்க்சிஸ்ட் கட்சியின் மா வட்டச் செயலாளர் கே. காமராஜ், செயற் குழு உறுப்பினர் எம்.ராஜ கோபால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். இதில் காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்ற அணிகளுக்கிடையே நடைபெற்ற லீக் சுற்றுப் போட்டியில் முதலிடத்தை டி- செட் அணியும் ,இரண்டாம் இடத்தை வின்ஸ்டார் அணியும் , மூன்றா வது இடத்தை சாவக்கட்டுப்பாளையம் விவேகானந்தா அணியும், நான்காவது இடத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விளையாட்டுக் கழக திருப்பூர் அணியும் பெற்றன. இந்தப் போட்டியில் சிறப்பாக விளை யாடிய டி-செட் அணியின் தலைவர் பி.கிருஷ்ணன், அருண்குமார், வின்ஸ் டார் அணி வீரர் கார்த்தி, விவேகானந்தா அணி வீரர் கார்த்தி, வாலிபர் சங்க விளை யாட்டுக்கழக வீரர் யோகேஷ் ஆகியோ ருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விளையாட்டுக்கழகம் கௌரவத் தலை வர் தளபதி ஆர். ஈஸ்வரன் தலைமையில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவில் திருப் பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் கே. தங்கவேல் ,மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் தங்கமணி, டி.ஒய்.எப்.ஐ. விளையாட்டுக் கழக பொறுப்பாளர் ஸ்டாலின்,எஸ்.எப்.ஐ. மாநிலத் தலைவர் கனகராஜ், வாலிபர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் சேகர், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.வடிவேல், துணைச் செயலாளர் நந்த கோபால்ஆகியோர் பரி சுகளை வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.