வட ஆப்பிரிக்காவில் ஒரு கோடிப்பேருக்கு நெருக்கடி பஞ்சத்தால் அவதி வட ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதியில் ஒரு கோடிப்பேருக்கு மேல் கடுமையான நெருக்கடியில் இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. வட ஆப்பிரிக்காவில் உள்ள சஹேல் பிராந்தியத் தில் சாட், மாலி, மவுரிடா னியா, நைஜர், பர்கினா ஃபாசோ மற்றும் செனகல் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள், உணவு கிடைக்கா மல் தவித்துக் கொண்டிருக் கிறார்கள். பஞ்சம், விளைச் சல் பொய்த்துப் போனது மற்றும் தொடர்ந்து உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலைகள் ஆகியவற்றால் இந்நாடு களில் உள்ள மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக் கிறார்கள். இந்த நெருக்கடியைச் சமாளிக்க உடனடியாக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வேண்டும் என்று ஐ.நா.சபை உலக நாடுக ளுக்கு கோரிக்கை வைத் துள்ளது. உணவுப் பாது காப்பு, குடிநீர், சுகாதாரம் மற்றும் துப்புரவுப்பணி ஆகியவை போர்க்கால அடிப்படையில் செய்தாக வேண்டிய அவசியம் உள் ளது. இப்பணிகளை மேற் கொள்ள நிதியுதவி இருந் தால்தான் சாத்தியம் என் பதையும் ஐ.நா. தெளிவுபடுத் தியுள்ளது. சர்வதேச செஞ்சிலு வைச் சங்கமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இப்பகுதியில் பெரும் அளவிலான மனித அழிவு ஏற்படும் முன்பாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டியிருக்கிறது. சஹேல் பகுதியைப் பாது காக்க நன்கொடையாளர் கள் முன்வர வேண்டும். உணவுப் பற்றாக்குறையைத் தகர்ப்பது அவசியமானது. பஞ்சம் மற்றும் வறட்சி ஆகியவை இப்பகுதியில் அடிக்கடி ஏற்படுபவையா கும். கடுமையான உணவு நெருக்கடியின் பிடியில் 1 கோடி மக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்தைத் தொட்டுவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி பணக் கார நாடுகள் இந்தப் பிரச் சனை பற்றி அக்கறை எதை யும் செலுத்தவில்லை. சோமாலியா, உகாண்டா போன்ற நாடுகளிலும் குழந் தைகள் உள்பட ஏராளமா னோர் பஞ்சத்துக்குப் பலி யாகி வருகிறார்கள். பெரும் மனிதப் பேரழிவு ஏற்படுவ தற்கு முன்பாகத் தலையிட வேண்டும் என்று எச்சரிக் கிறது ஐக்கிய நாடுகள் சபை.

Leave A Reply

%d bloggers like this: