தக்காளி கூடைகளுக்கு அடியில் மறைத்து ரேஷன் அரிசி கடத்தல் ஐவர் கைது – வேன்கள் பறிமுதல் மே.பாளையம், பிப். 15- மேட்டுப்பாளையத்தி லிருந்து மைசூருக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பிடிபட் டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு கடத்த லுக்கு பயன்படுத் தப்பட்ட இரு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையத்தில் இருந்து மைசூருக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வரு வதாக பெரியநாயக்கன் பாளையம் டி.எ°.பி.சக்தி வேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைய டுத்து கோவை குடிமைப் பொருள் குற்ற புலனாய் வுத்துறை ஆய்வாளர் அண் ணாதுரை, மேட்டுப்பா ளையம் காவல் நிலையத் தில் ஆய்வாளர் சுப்பிர மணியன் உள்ளிட்ட காவல் துறையினர் மேட்டுப் பாளையம் ஓடந்துறை சாலையில் வாகன ஆய் வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழி யாக தக்காளி பாரம் ஏற்றி வந்த மகிந்திரா வேனை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர். அப்போது தக் காளி கூடைகளுக்கு அடி யில் ரேஷன் அரிசி மூட் டைகள் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. இதனைய டுத்து வேனில் இருந்த நாசர் (28), ஜாபர் பாபு (23), அபுபக்கர் (23), சபீர் (24) ஆகியோர் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரிடம் நடைபெற்ற விசாரணையில் வெள்ளி பாளையம் சாலைப்பிரி வில் முகைதீன் பாட்ஷா என்பவருக்கு சொந்தமான குடோனில் போலீசார் சோதனையிட்டர். அப் போது அங்கு ஒரு மகிந் திரா வேனில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றப் பட்டு மைசூருக்கு கொண்டு செல்ல தயாராக நிறுத்தப் பட்டிருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. இதனைய டுத்து அந்த வேனும், அங்கு அரிசியை பதுக்கிக் கொண்டிருந்த அப்துல் காதர் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 5 பேரும், அவர்களிடமி ருந்த 2 டன் ரேஷன் அரிசி யும், கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட 2 மகிந்திரா வேனும், இரண்டு இரு சக் கர வாகனங்களும் பறிமு தல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 5 பேரும் மேட்டுப்பாளை யம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் நீதி மன்றக் காவலில் கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.