முன்னாள் திமுக அமைச்சர் தங்கம்தென்னரசு வீடுகளில் ரெய்டு அருப்புக்கோட்டை, பிப். 15 – திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டவர் தங்கம் தென்னரசு. தங்கம் தென்னரசு வீடு லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் சோதனைக்குள்ளாகியுள்ளது. அருப்புக்கோட்டை மல்லாங்கிணறு பகுதி யில் உள்ள தங்கம் தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் புதன்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீடு மற்றும் நரிக்குடி, காரியா பட்டி உள்ளிட்ட தங்கம் தென்னரசுவின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டது. மேலும் தங்கம் தென்னரசுவின் உதவியாளரின் மதுரை வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் என்ன சிக்கியது என்பது தெரியவில்லை. சோதனையைத் தொடர்ந்து தங்கம் தென்னரசுவின் வீட்டில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். ஏற்கனவே பல்வேறு முன்னாள் அமைச் சர்கள் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறு வனங்கள், கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குகளும் பதிவாகியுள்ளன. தற்போது அந்த வரிசையில் தென்னரசும் இணைகிறார். தங்கம் தென்னரசு, புதிதாக உரு வாக்கப்பட்ட திருச்சுழி தொகுதியிலிருந்து திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டவர்.

Leave A Reply