மின் உற்பத்தி நிலையங்களில் பழுதுகளை உடனே சரி செய்க! மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் கேட்டுப்பெறுக! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல் சென்னை, பிப். 15- தமிழக மின்நிலையங் களில் ஏற்பட்டுள்ள குறை பாடுகளை சீர்படுத்தி, மின் வெட்டு பாதிப்பை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனி°ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 15 புதனன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதரா ஜன், உ.வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம் பின்வருமாறு: தமிழகத்தில் மின்வெட்டு காரணமாக நகர்ப்புறங்களில் 2 மணி நேரம் முதல் 5 மணி நேர மும், கிராமப்புறங்களில் எட்டு முதல் 10 மணி நேரமும் மின் சாரம் இன்றி கடுமையான பாதிப்புக்கு மக்கள் தள்ளப்பட் டுள்ளனர். சிறு, குறு, நடுத்தர தொழில்கள்அனைத்தும் பாதிக்கப்பட்டு தொழில் முனை வோரும், பாதிக்கப்படுகிற தொழிலாளர்களும் மின்வெட் டை எதிர்த்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக, திமுக ஆட்சியின் போது புதிய மின்திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. மேலும், இக்காலத்தில் ஏற்பட் டுள்ள தொழில் மற்றும் இதர நுகர்வுகளுக்கேற்ப கூடுதல் மின்சார உற்பத்திக்கு திட்ட மிடாததும், தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களில் ஏற் பட்டுள்ள உற்பத்திக்குறை வுமே தற்போதைய மின்வெட் டுக்கு பிரதான காரணங்களா கும். ஆட்சிப் பொறுப்பேற்று 9 மாதங்களாகியும் இதனை நிவர்த்தி செய்வதற்கு எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையை யும் அஇஅதிமுக அரசு மேற் கொள்ளவில்லை. மின்வெட்டால் பாதிக்கப் பட்டுள்ள தொழில்கள், விவ சாயிகள், வணிகர்கள், தொழி லாளர்கள், பொதுமக்கள் நல னைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய தொகுப் பில் இருந்து கூடுதலான மின்சாரத்தை பெறுவதற்கும், உற்பத்தி குறைந்துள்ள மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சீர்படுத்த வும், கூடுதல் மின்உற்பத் திக்கு புதிய திட்டங்களை உரு வாக்கிடவும் துரித நடவடிக் கை மேற்கொள்ள வேண்டு மென மார்க்சி°ட் கட்சி தமி ழக அரசை வலி யுறுத்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.