மினி பஸ்ஸில் பயணம் செய்த பள்ளி மாணவி படுகாயம் குன்னூரில் பொதுமக்கள் சாலை மறியல் குன்னூர்,பிப்.15- குன்னூர் அருகே அதி வேகமாக மினி பஸ் ஓட்டி யதால் அதில் பயணம் செய்த பள்ளி மாணவி விபத்துக்குள்ளானார். இச் சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன் னூர் அருகேயுள்ள மேல் குன்னூர் ஆழ்வார் பேட் டையைச் சேர்ந்தவர் மணி கண்டன். இவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வரு கிறார். இவரது மகள் ஸ்நேகா (வயது 15)குன்னூ ரிலுள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ் வாயன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பு வதற்காக ஒய்.எம்.சி.ஏ பேருந்து நிறுத்தத்திலி ருந்து சிம்ஸ் பூங்கா செல் லும் மினி ப° ஒன்றில் ஏறி னார். அப்போது வேகமா கச் சென்ற பேருந்து, ஒரு வளைவில் அதிவேகமாக திரும்பிதில் மாணவி ஸ்நேகா பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவி ஸ்நேகா குன்னுரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக் கப்பட்டர். படுகாயம் அடைந்த பள்ளி மாணவி தற்போது ஆபத்தான நிலையில் உயிருக்கு போ ராடிக்கொண்டிருக்கிறார். இச்சம்பவம் குறித்த தகவலறிந்த மேல் குன்னூர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், வியாபாரிகள், மற் றும் சிபிஎம், சிபிஐ, திமுக, தேமுதிக, பாஜக உள் ளிட்ட அனைத்து கட்சியி னர் விபத்திற்கு காரண மான பேருந்து ஓட்டுநரை கைது செய்யக்கோரி புத னன்று (பிப்.15) சாலை மறி யலில் ஈடுபட்டனர். பின்னர், இம்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஆர்.பத்ரி, சிபிஐ போஜராஜ். திமுகவைச் சேர்ந்த செல்வம், பாஜக வைச் சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய டி.எஸ்.பி. மாடசாமி, மற் றும் காவல்துறை ஆய்வா ளர்கள் ஆகியோர் மினி பஸ் ஓட்டுநரை கைது செய்வதாக உறுதியளித் தனர். மேலும் மினி பேருந் துகள் வேகமாக ஓட்டப் படுவதை தடுத்திடவும், முறைப்படுத்தவும் வரும் வெள்ளியன்று வட்டார போக்குவரத்து அதிகாரி கள், பொதுமக்கள் மற் றும் அனைத்து அரசியல் கட்சிகளின் முன்னிலை யில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதி கூறினார். இதனைத் தொ டர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: