மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாட்டை நோக்கி அணிவகுப்பு நாகை மாவட்டத்தில் கூட்டங்கள் கிராமங்கள் தோறும் பேரார்வம் இன்றும் – நாளையும் நடைபெறுகிறது நாகப்பட்டினம், பிப். 15 பிப்ரவரி 22 முதல் 25 வரை, நாகையில் நடைபெறவிருக்கும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தமிழ்நாடு மாநில மாநாட்டை நோக்கிப் பொது மக்களைத் திரட்டும் வண்ணம், பிப்ரவரி 16, 17 ஆகிய இரு நாட்களில் (இன்றும் நாளையும்) நாகை மாவட்டம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைபெறுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் நடை பெறும் இந்த கிராமசபைக் கூட்டங் களில், அந்தந்த கிராம மக்களைத் திரட்டி, கட்சித் தலைவர்கள் மாநில மாநாட்டின் மகத்துவங்களைப் பற்றியும் சிறப்பம் சங்களைப் பற்றியும் பிரச்சாரம் செய் கிறார்கள். தலைவர்கள் பங்குபெறும் பொதுக் கூட்டங்கள் பிப்ரவரி – 18, சனிக்கிழமை மாலை மயிலாடுதுறையிலும் செம்பனார் கோயிலிலும் மாபெரும் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடை பெறுகின்றன. மயிலாடுதுறைப் பொதுக்கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி. சிறப்புரையாற்றுகிறார். தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோயிலில் மாநிலச் செயற்குழு உறுப் பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ எழுச்சியுரையாற்றுகிறார். மக்களைக் கவரும் கலைக்குழுக்கள் நாடகக் கலைஞரும் இயக்குநருமான பிரளயன், நாடகக் கலைஞர்கள் ஜே.ஜேசுதாஸ், அசோக், சேலம் கண் ணன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட பிரச்சார வீதி நாடகங்களை நாகை நெல்மணிக் கலைக்குழுவினர் புதன் கிழமை மாலை துவக்கியுள்ளனர். தஞ்சை விழுதுகள் கலைக்குழுவினர், பிரச்சாரமும் இசைப்பாடல்களாகவும் வியாழன் காலை முதல் மாவட்டம் முழுவதும் வலம் வருகிறார்கள். புதுவை சப்தர் ஹஷ்மி கலைக்குழு வினர் பிப்ரவரி 16 வியாழன் மாலை யிலிருந்து தரங்கம்பாடியிலிருந்து பிரச்சாரத்தை துவக்குகின்றனர். புதுகை பூபாளம் கலைக்குழுவினரும் மற்ற கலைக்குழுவினரும் நாகை மாவட்டம் முழுவதும் பிரச்சாரக் கலைநிகழ்ச்சிகள் நடத்து கிறார்கள். திரைப்பட இயக்குநர்கள் இரா. காளீஸ்வரன், ஏகாதசி, கவிஞர்கள் நவகவி, வையம்பட்டி முத்துச்சாமி, ந.காவியன், எல்.பி.சாமி, ஆவராணி ஆனந்தன் ஆகியோரின் மாநாட்டுப் பிரச்சாரப் பாடல்கள், பாடகர்கள் மற் றும் இசைக்குழு மூலமாகவும், ஒலிப் பேழை மூலமாகவும் மாவட்டம் முழு வதும் ஒலிக்கவுள்ளன. இந்தக் கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் எல்லாம் பிப்ரவரி 25 அன்று மாலை, லட்சக்கணக் கில் மக்கள் திரளும் பொது மாநாட்டு மேடையிலும் சங்கமிக்கவுள்ளன. மாற்றுப்பாதைக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தமிழ்நாடு மாநில மாநாடு நாகை மண்ணில், தேசத் தை ஈர்க்கும் பல அதிர்வுகளை உருவாக் கிட, இன்னும் எண்ணற்ற நிகழ்ச்சிகள் அணிவகுத்து நிற்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.