மாணவர் தற்கொலை 1-ம்பக்க தொடர்ச்சி இறந்த மாணவன் அனுஜின் பெற் றோர்கள் வந்து சேராதவரை சடலத்தை அங் கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்று மார்க் சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும், மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்துக்கு விசுவாசமாக டிஎஸ்பி ஆனால் திரண்டிருந்தவர்களின் உணர்வு களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், உடுமலை காவல் டிஎஸ்பி செந்தில், மடத்துக் குளம் ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர் அராஜகமாக நடந்து கொண்டனர். பள்ளி மாணவர் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேர்ந்தார். அவர் பள்ளியில் மாணவர்களிடம் விசார ணை மேற்கொண்டு விடுதியையும் ஆய்வு செய்தார். உடுமலை ஆர்.கே.ஆர். பள்ளி விடுதியில் மாணவர்களைத் தனியாகத் தங்க வைப் பதற்கு கொட்டடி ஒன்று இருந்ததைப் பார்த்து காவல் துறையினரே அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி இச்சம்பவம் குறித்து ஆலோ சனை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளரை அனைத்துக் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பள்ளி நிர்வாகி ஆர்.கே.ஆர்.ராமசாமி மீதும், ஆசிரியர் மகேஸ் வரன் மீதும் வழக்குப்பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: