மகளிர் குழுக்களுக்கு 2.24 கோடி கடன் கோவை, பிப். 15- கோவையில் புத னன்று, கோவை கனரா வங்கியின் மைக்ரோ பினான்° கிளை சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி முகாம் மத்திய கூட்டுறவு வங்கி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு.கருணா கரன் தலைமை வகித்தார். மேலும், 100 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2 கோடியே 24 லட்சம் ரூபாய் கடன் வழங்கினார். பின்னர் அவர் பேசுகை யில், கோவை மாவட்டத் தில் உள்ள 15 ஆயிரம் மக ளிர் சுய உதவிக்குழுக் க ளுக்கு கடன் தொகையாக ரூ.15 கோடி வழங்கப்பட் டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், ஏரா ளமான மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண் டனர்.

Leave A Reply

%d bloggers like this: