புதுவையில் வி.தொ.ச. போராட்டம் புதுச்சேரி, பிப். 15- புதுச்சேரியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில் ஆண்டுக்கு 100நாட்கள் கூட வேலை அளிக்காததை கண்டித்தும், இத்திட்டத்தில் கோடிக்கணக்கான பணத்தை அதிகாரிகள் ஊதாரித்தன மாக செலவு செய்துள்ளதை கண்டித்தும், வில்லியனூர் பிடிஓ அலுவலகத்தின் கீழ் உள்ள 34 பஞ்சாயத்துகளுக்கு செலவு செய்யும் தொகையில் ஊழல் நடைபெற்றுள்ளதை விசாரிக்க வலியுறுத்தியும் திரு வாண்டார் கோயில் கிராமத் தில் இயங்கிய சுய உதவிக்குழு தலைவி கல்யாணியின் சேமிப்பு தொகை ரூ.1லட்சத்தை பிடிஓ அதிகாரிகள் இளங்கோ, முத்துகண்ணு ஆகியோர் முறைகேடு செய்துள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இத் தொகையை உடனே மீட்டு கொடுக்க வலியுறுத்தியும்மேற் கண்ட புகார்கள் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தர விடக்கோரியும் அகில இந்திய விவசாயத்தொழிலாளர்சங்கத் தின் பிரதேச தலைவர் கலிவர தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிபிஎம் பிரதேசச் செய லாளர் வெ.பெருமாள், விவசா யிகள் சங்கத்தின் பிரதேச தலைவர் நிலவழகன், சங்கத் தின் செயலாளர் மணிபாலன், துணைதலைவர் முருகையன், கமலகாசன் மற்றும் பலர் உரையாற்றினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.