புதிய ரயில் தடங்கள் அமைப்பது மத்திய அரசின் பொறுப்பு தொழிலாளர் ஊதிய நிதியை திருப்புவதற்கு எதிர்ப்பு சென்னை, பிப். 15 – தனியார்மயமாக்கல் கொள்கையின் ஒரு பகுதி யாகவே ரயில்வே திட்டங்க ளுக்கு மத்திய அரசு ஒதுக்க மறுக்கிறது. ஆகவே, பொதுத் துறைகளைத் தனியார் மய மாக்கும் கொள்கைக்கு எதி ரான நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ரயில்வே தொழிலாளர்கள் பேராதரவு தர வேண்டு கோள் விடுக்கப்பட்டது. விலை உயர்வு, வேலை யின்மை,தனியார்மயமாக்கல், மோசடியான ஓய்வூதியச் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து பிப்ரவரி28 அன்று அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட் டம் நடைபெற இருப்பது தெரிந்ததே. அனைத்து மத் திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள அறைகூவலை ஏற்று நடை பெற உள்ள இந்தப் போராட் டத்தை ஆதரித்து சென்னை யில், சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே தொழிலாளர் சங்கங்களின் சார்பில் புதனன்று (பிப்.15) கருத்தரங்கம் நடைபெற் றது. டிஆர்இயு, ஏஐஎல் ஆர்எ°ஏ, ஏஐஎ°எம்ஏ, ஏஐஆர்ஏஎ°ஏ, எ°ஆர் இஎப், டிஆர்கேஎ°, எ°ஆர்எல்யு, ஏஐஆர்எம் எ°ஏ, எம்ஆர்டியு, ஏடிபி, ஏஐஜிசி, ஏஐஆர்சிசிஏ ஆகிய சங்கங்கள் இணைந்து இந் தக் கருத்தரங்கத்தை நடத்தின. இதில் நிறைவுரையாற் றிய டிஆர்இயு செயல் தலை வர் ஆர். இளங்கோவன், 8 மணி நேர வேலையை அம லாக்குதல், காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்குதல், பதவி கள் உருவாக்குவதற்கு மேட் சிங் சரண்டர் வற்புறுத்தப் படக்கூடாது, கூடுதல் நேரப் பணிக்கான பணப்பயன், ஊக்கத்தொகை, மருத்துவ வசதிகள் வெட்டப்படக் கூடாது ஆகியவை உள் ளிட்ட ரயில்வே தொழிலா ளர் கோரிக்கைகளும் இந்தப் போராட்டத்தில் இணைக் கப்பட்டுள்ளன என்றார். ரயில்வே நிர்வாகத்திடம் நிதி இல்லை என்று கூறி தொழிலாளர்களுக்கான சலுகைகள் வெட்டப்படு கின்றன. ஆனால், நடப்பு நிதியாண்டில் ரயில்வேக்கு ரூ.12,000 கோடி லாபம் கிடைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. ஆகவே தொழி லாளர்களுக்குக் கொடுப் பதற்கு நிதி இல்லை என்பது பொய்யான தகவல். உண் மையில் புதிய தடங்கள் உரு வாக்குல், இரட்டைத் தடங் கள் அமைத்தல், கூடுதல் ரயில் பெட்டிகள் தயாரித்தல் போன்ற திட்டங்களுக்குத் தான் நிதி இல்லை. அந்தத் திட்டங்களுக்கு தொழிலா ளர்களின் ஊதியம் உள் ளிட்ட நிதி திருப்பிவிடப் படுகிறது என்பதே உண்மை என்றார் அவர். தேசிய நெடுஞ்சாலை களை சாலைகளை அர சாங்கம்தான் அமைக்கிறது. அந்தச் சாலைகளில் அரசுப் போக்குவரத்து நிறுவனங் கள் அமைப்பதில்லை. அதே போல், ரயில் தடங்கள் ஏற் படுத்துதல் உள்ளிட்ட திட் டங்களுக்கு மத்திய அரசு தான் நிதி ஒதுக்க வேண்டு மேயன்றி ரயில்வே நிர்வாகத் திடம் அந்தச் சுமையை இயக்கங்களுக்கு இந்தக் கருத்தரங்கில் திட்டமிடப் பட்டது. டிஆர்இயு பொதுச் செயலாளர் அ. ஜானகிரா மன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் ஆர். சாரங்க பாணி (எ°ஆர்எல்யு), ஆர். வெங்கடகிருஷ்ணன் (எ°ஆர்இஎப்), பி. ராம தா° (டிஆர்கேஎ°), ப. ஜான் வின்சென்ட் (ஏஐஎ° எம்ஏ), ஜியோமி ஜார்ஜ் (ஏஐஎல்ஆர்எ°ஏ), ரெஜி ஜார்ஜ் (ஏஐஆர்ஏஎ°ஏ) ஆகியோர் உரையாற்றினர். ரயில்வேயின் பல்வேறு பிரிவு களைச் சேர்ந்த தொழிலா ளர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: