பிப்.28 வேலைநிறுத்தம் பெட்ரோலிய ஒப்பந்தத் தொழிலாளர் உறுதி திண்டுக்கல், பிப். 15 – பிப்ரவரி 28ம் தேதி நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் எண்ணெய் நிறு வனங்களின் கே°, பாட்லிங் மையங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முழு மையாக பங்கேற்க முடி வெடுத்துள்ளனர். கடந்த ஞாயிறன்று கே° கம்பெனிகளில் பணி யாற்றும் தொழிலாளர்க ளின் சிறப்பு மாநாடு சேலத் தில் நடைபெற் றது. மாநாட்டைத் துவக்கி வைத்து மாநிலத் தலைவர் கே. ஆறுமுக நயினார் பேசினார். மாநிலச் செயலாளர் கே.விஜ யன் மாநாட்டின் நோக்கங் களை விளக்கிப் பேசினார். இம் மாநாட்டில் காமராஜ் (ஓஎன்ஜிசி), ஜெயக்குமார் (பி.பி.சி), எ°.செல்வராஜ் (ஐ.ஓ.சி. லாரி ஓட்டுநர் சங் கம்), வேலுச்சாமி (பி.பி.சி. லாரி ஓட்டுநர் சங்கம்), ஜெயபால் (சிபிசிஎல்), சிஐடியு சேலம் மாவட்டச் செயலாளர் உதய குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சிஐடியு மாநில துணைப் பொதுச் செய லாளர் சுகுமாறன் முடித்து வைத்து பேசினார். மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பாட்லிங் தொழிலாளர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட் டது. எண்ணெய் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களை உடன டியாக நிரந்தரப்படுத்த வேண்டும். சமவேலைக்கு சம ஊதி யம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். லாரி ஓட்டுநர், கிளீனர்க ளுக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும். பி.எப். பணிக் கொடை வழங்க வேண்டும், சிலிண் டர் விநியோகிக்கும் தொழிலாளர் களுக்கு குறைந்த பட்ச சம்ப ளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.