பிப்.28ல் பொது வேலை நிறுத்தம்: மாபெரும் வெற்றியை பதிவு செய்வோம் அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற கூட்டத்தில் சூளுரை கோவை. பிப்.15- பிப்.28ந்தேதி நடை பெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத் தத்தை மாபெரும் அள வில் வெற்றிபெற செய்வது என அனைத்து தொழிற் சங்கங்கள் பங்கேற்ற கூட் டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண் டும். தங்குதடையற்ற மின் சாரம் வழங்கிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங் களை முறையாக அமலாக் கிட வேண்டும். புதிய ஓய் வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு களை தனியாருக்கு விற் பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கங்களின் சார்பில் வரு கின்ற பிப்.28ந்தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத் தத்தை வெற்றிகரமாக்கி டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் ஆயத்த மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகு தியாக கோவையில் உள்ள இராமநாதபுரம் ஐஎன்டி யுசி தலைமைச்சங்க வளா கத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஆயத்த மாநாட்டிற்கு ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பாலசுந்தரம் தலைமை தாங்கினார். இக்கூட்டத் தில் சிஐடியு தொழிற்சங் கத்தின் மாவட்டச் செயலா ளர் எ°.ஆறுமுகம், ஐஎன் டியுசி மாவட்டத் தலைவர் சீனிவாசன், பிஎம்எ° மாவட்டச் செயலாளர் சிதம்பரசாமி, எச்எம்எ° மாநிலச் செயலாளர் எ°.ர hஜாமணி, எல்பிஎப் மாவட்டச் செயலாளர் வெ.கிருஷ்ணசாமி, ஏஐசி சிடியு மாவட்டச் செயலா ளர் தாமோதரன் ஆகி யோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இக்கூட்டத்தில், பிப்.28ந் தேதியன்று வேலைநிறுத் தம், பேரணி மற்றும் ஆர்ப் பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும். இந்த வேலை நிறுத்தத்தை விளக்கி தெரு முனைப் பிரச்சாரம். வேன் பிரச்சாரம். துண்டுப்பிர சுரங்கள் மூலம் மக்களி டையே தீவிரப் பிரச்சாரம் செய்வது என மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆயத்த மாநாட்டில் மத்திய தொழிற்சங்களின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உள் ளிட்ட நூற்றுக்கணக்கா னோர் பங்கேற்றனர். சேலம் சேலம் ஏஐடியுசி அலு வலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டிற்கு எல்பிஎப் தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியுசி தொழிற் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பன்னீர் செல்வம், செயலாளர் உதயகுமார், கோபிகுமார், ஏஐடியுசி சார்பில் மாவட்டச் செயலா ளர் பி.பரமசிவம், அமைப் புச்சாரா தொழிலாளர் சங் கத்தின் வட்டச் செயலாளர் ஏ.விமலன், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஒ. மாணிக்கம், சுகாதார சங் கத்தின் மாவட்டச் செயலா ளர் சி.ஜீவானந்தம், எச்எம் எ° சங்கத்தின் சார்பில் அர்ச்சுணன், கணேசன், ஏஐசிசிடியு சங்கத்தின் சார் பில் நடராஜன், வேல்முரு கன், ஐஎன்டியுசி சார்பில் °வர்ணராஜ், எல்பிஎப் சங்கத்தின் பாலமுருகன், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், பொதுத் துறை மற்றும் அரசு ஊழி யர்களின் கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்த ஆலோசனைக் கூட்டம் ஜான்சன் பேட்டை மைத் ரேன் நினைவகத்தில் நடை பெற்றது. இதில் நாடு தழு விய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: