நார்வே குழந்தைகள் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும்: பிருந்தா காரத் புதுதில்லி, பிப். 15- நார்வேயில் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட இரண்டு இந்தியக் குழந்தைகளும் நாடு திரும்புவதற்கு இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ் ணாவிடம் வலியுறுத்தினார். இந்தியாவைச் சேர்ந்த சகா ரிகா-அனுருப் தம்பதியினர் நார்வேயில் உள்ளனர். இவர் களுக்கு இடையே உள்ள உற வில் பிரச்சனை ஏற்பட்டு வன் முறை ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களது 3 வயது குழந்தை அபிக்யன் மற்றும் 1 வயதுக்குழந்தை ஐஸ்வர்யா ஆகியோரை நார்வே அரசு, கடந்த ஆண்டு மே மாதம் பெற் றோரிடம் இருந்து பிரித்துச் சென்றது. இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா-நார்வே அரசு இடையே நடந்த பேச்சு வார்த்தைக்குப் பலனாக குழந் தைகளின் கொல்கத்தா மாமா அருணா பாஷ் பட்டாச்சார்யா விடம் குழந்தைகளை ஒப் படைப்பதற்கு நார்வே ஒப்புக் கொண்டுள்ளது. குழந்தை களை இந்தியா கொண்டு வரு வதற்கு மத்திய அரசு உடன டியாகத் தலையிட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ் ணாவை சந்தித்து பிருந்தா காரத் வலியுறுத்தினார். இதுகுறித்து பிருந்தா காரத் கூறுகையில், இவ்விவகாரத்தில் நார்வே குழந்தைகள் பாதுகாப்பு சேவைப்பணி தலைவர் குணார் டோரசன் அனைத்து அத்தியாவசிய தகவல்களை பெறுவதற்கு முன்னர், முடிவு எடுத்ததாக கருதுகிறேன். ஏப்ரல் மாதத்திற்கு பின்னரும், அவர்கள் திருப்பி அனுப்பப்பட உத்தரவாதம் இல்லை என அவர் கூறுகிறார். அனுருப் பட்டாச்சார்யா தம்பதியின் விசா மார்ச் 8ம் தேதி காலாவதி ஆகி றது. அந்த விசா நீட்டிக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டு குழந்தை களை உடனடியாகத் தாயகம் கொண்டு வர வேண்டும் என்ற வேண்டுகோளை கிருஷ்ணா பொறுமையாகக் கேட்டு, உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார் என்றும் பிருந்தா காரத் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: