நசவாளர்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருப்பூர், பிப். 15- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவா ளர்களுக்கு தமிழக அரசின் திட்டத்தின் படி காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட் சியரிடம் சிஐடியு சார்பில் திங்களன்று மனுக் கொடுக் கப்பட்டது. பல்லடம் ப.வடுகபாளையம் புதூர் வினோபா நகர் கைத்தறி நெசவாளர்கள் சுமார் 300 பேர் ஒன்று திரண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வருகை புரிந்த னர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், பல்லடம் சிஐடியு செயலாளர் ப.கு.சத்திய மூர்த்தி, நெசவாளர் சங்கப் பொறுப்புச் செயலாளர் வி.சண்மு கம், தலைவர் கே.உத்தமன், பொருளாளர் பாண்டுரங் கன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரை நெசவாளர் கள் சந்தித்தனர். ப.வடுகபாளையம் புதூர் வினோபா நகரில் தற் போது குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வச தியும் இல்லாத நிலையில் நெசவாளர் குடும்பங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தில் நெசவாளர்களுக் குக் காங்கிரீட் வீடுகள் கட்டித் தருவதுடன், சாலை, மின் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஆவன செய்வதாக ஆட்சியர் மதிவாணன் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: