தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அரசு முடிவுகள் எடுத்திட வேண்டும் 44வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு புதுதில்லி, பிப். 15- ஆட்சியாளர்கள் தொழிலாளர் பிரதிநிதிகளு டன் கலந்துபேசி, கருத் தொற்றுமைக்கு வந்தபின்பு தான் தொழிலாளர்கள் சம் பந்தப்பட்ட செயல்களில் இறங்கிட வேண்டும், இல் லையேல் இதுபோன்று இந் தியத் தொழிலாளர் மாநாடு நடத்துவதில் பயனேதுமில் லை என்று சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் கூறினார். தலைநகர் தில்லியில் இந் தியத் தொழிலாளர் மாநாட் டின் 44ஆவது அமர்வு செவ் வாயன்று தொடங்கியது. இம்மாநாட்டில் தொழிலா ளர் அமைப்புகளின் சார்பி லும், தொழில் உடமையா ளர் அமைப்புகளின் சார்பி லும், மத்திய – மாநில அரசு களின் சார்பிலும் சம எண் ணிக்கையில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொழிலா ளர் நலன்கள் குறித்து முடி வுகள் மேற்கொள்ளப்படும். இம்மாநாட்டில் சிஐடியு சார்பில் அதன் தலைவர் ஏ. கே.பத்மநாபன் பேசியதாவது: நாட்டின் தொழிலாளர் படையில் சுமார் 47 கோடி யே 50 லட்சம் பேர் தங்கள் சங்க வித்தியாசங்களை மறந்து ஒரே குரலில் தங்கள் கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவிக்க ஒன்றுதிரண்டி ருக்கக்கூடிய சூழ்நிலையில், இம்மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சி யாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளின் விளைவாக வேலையிலிருந் தோர் மிகப் பெரிய அளவில் வேலைகளை இழந்து வரு கின்றனர். இத்துடன் நாள் தோறும் விஷம்போல் ஏறி வரும் விலைவாசி, தொழி லாளர்களை ஒப்பந்த அடிப் படையில் நியமிப்பது அதி கரித்து வருதல், தொழிலா ளர் நலச் சட்டங்கள் முரட் டுத்தனமாக மீறப்படுதல், அற்பக் கூலி அளித்தல், முறைசாராத் தொழிலாளர் களுக்கான சமூகப் பாது காப்புப் பணிகள் மிகவும் நத்தை வேகத்தில் நகர்தல், பொதுத்துறை நிறுவனங் களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக் கைகள் தொடர்கின்றன. தற்போது அமலில் இருந்து வரும் 1970ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலா ளர் (முறைப்படுத்தல் மற் றும் ஒழித்தல்)சட்டத்தில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், அனைத்துத் தொழிலாளர்க ளுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் அளிப்பது தொடர் பாக திருத்தம் கொண்டு வருவதற்கான அரசின் முயற்சி தள்ளிக்கொண்டே போகிறது. இதனால் நாட் டில் உள்ள ஐந்து கோடி ஒப்பந்தத் தொழிலாளர் களின் அவலநிலை தொடர் கிறது. பிரதமர் அவர்கள் 2004 ஆம் ஆண்டு தொழிலாளர் களுக்கான விருதுகளை வழங்கும் நிகழ்வொன்றில், தான் தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என்று உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதிமொழி இன்னும் அமல்படுத்தப்படாமல் ஏட்டளவிலேயே இருந்து வருகிறது. அது மட்டுமல்ல, அமலில் உள்ள தொழிலா ளர் நலச் சட்டங்களை ஓரங் கட்டிவிட்டு, தேசிய உற் பத்தி முதலீடு மண்டலங் கள் (சூஆஐஷ்-சூயவiடியேட ஆயரேகயஉவரசiபே ஐnஎநளவஅநவே ஷ்டிநே) அமைக் கப் பட்டிருக்கின்றன. இத்து டன் ஓய்வூதிய நிதியத்தைத் தனியாரிடம் தாரை வார்ப்பு, சில்லரை வர்த்தகத்தில் அந் நிய நேரடி முதலீடு, ஐரோப் பிய ஒன்றிய நாடுகளுட னான சுதந்திர வர்த்தக ஒப் பந்தம் ஆகியவற்றை அரசு தன்னிச்சையாக மேற் கொள்ளத் துணிந்து செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. இம்மாநாட்டின் மூலம் அரசு இந்நடவடிக்கைகள் தொடர்பாக தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி, கருத்தொற்றுமை ஏற் பட்ட பின்னர்தான் அமல் படுத்த வேண்டும் என்று சிஐ டியு அரசாங்கத்தை வலி யுறுத்துகிறது. அவ்வாறு அரசாங்கம் முன்வரவில் லையெனில் இத்தகைய மாநாடுகளை நடத்துவதில் அர்த்தமேதும் இல்லை. இவ்வாறு ஏ.கே.பத்ம நாபன் பேசினார். (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.