தொடர் மின்வெட்டைக் கண்டித்து பாத்திரப்பட்டறைகள் வேலை நிறுத்தம்- கடையடைப்பு போராட்டம் திருப்பூர்,பிப்.15- திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் பாத்திர உற்பத்தியாளர் கள், பாத்திர வியாபாரிகள் சங்கம், பாத்திரத் தொழி லாளர்கள் சங்கம், வியாபா ரிகள் சங்கத்தினர் சார்பில் தொடர் மின் வெட்டி னால் அழிந்து வரும் பாத் திரத் தொழிலை பாது காக்கக் கோரியும், சீரான மற்றும் தடையற்ற மின்சா ரம் விநியோகம் செய்யக் கோரியும் செவ்வாயன்று கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தப்போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் அனுப்பர்பா ளையத்தில் செம்பு, பித் தளை, எவர்சில்வர் பாத்தி ரம் உற்பத்தி செய்யும் பாத் திரப்பட்டறைகளில் ஆயி ரக்கணக்கான தொழிலா ளர்கள் பணியாற்றி வரு கின்றனர். தமிழகத்தில் தற் போது, அமல்படுத்தப் பட்டு வரும் வரலாறு காணாத கடும் மின்வெட் டின் காரணமாக பாத்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். இம்மின் வெட்டின் காரணமாக அழிந்து வரும் பாத்திரத் தொழிலை பாதுகாத்திடும் வகையில் தடையற்ற மின் சாரம் வழங்கக்கோரி வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். இத னால், அனுப்பர்பாளை யம் பகுதியில் உள்ள 400க் கும் மேற்பட்ட பாத்திரப் பட்டறைகள் மூடப்பட்டி ருந்தன. மேலும். இப்போ ராட்டத்திற்கு ஆதரவாக பாத்திர °டோர், பேன்சி கடைகள், மளிகைக் கடை கள், டீக்கடை, பேக்கரி, பெட்டிக்கடை, ஓட்டல் கள் உள்ளிட்ட நூற்றுக் கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங் கள் அடைக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப் பட்டது. இதேபோல். பாத்திரத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆத ரவாக அனுப்பர்பாளை யம், அனுப்பர்பாளையம் புதூர், 15வேலம்பாளை யம், பெரியார்காலனி, ஆத் துப்பாளையம், திலகர்ந கர், அங்கேரிபாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கடைய டைப்பு செய்யப்பட்டிருத் தன. இவ்வேலை நிறுத்தத் தில் ஈடுபட்ட பாத்திர உற் பத்தியாளர்கள், பாத்திர வியாபாரிகள் சங்கம், பாத் திரத் தொழிலாளர்கள் சங் கம், வியாபாரிகள் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் செவ்வா யன்று காலை 10 மணியள வில் பெரியார் காலனி பகு தியிலிருந்து கறுப்பு பேட்ச் அணிந்து பேரணி யாக புறப்பட்டனர். இப் பேரணி போலீ° நிலை யம், மாரியம்மன் கோவில் ஆத்துப்பாளையம் ரோடு வழியாக அனுப்பர்பாளை யம் பேருந்து நிலைய பகுதி யில் ஆர்ப்பாட்டம் மற் றும் மறியல் போரட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பாத்திரத் தொழிலாளர் சங் கத்தின் (சிஐடியு) செயலா ளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார் பில் ஆறுமுகம்,குப்புசாமி, எல்பிஎப் சார்பில் நட ராஜ்,வேலுசாமி, ஐஎன்டி யுசி சார்பில் கணேசன், தர்மலிங்கம், ஏஐடியுசி சார்பில் தண்டபானி, குமார், செல்வராஜ், நாக ராஜ், எச்எம்எ° சார்பில் திருஞானம்,சுப்பிரமணி, பிஎம்எ° சார்பில் லோகு, கார்த்திக், செந்தில், காமாட் சியம்மன் பாத்திரத்தொழி லாளர் சங்கம் முத்துகிருஷ் ணன்,அர்ச்சுனன் ஆகி யோரும், பித்தளை பாத் திர உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ராமசாமி, செய லாளர் ஆறுமுகம், பொரு ளாளர் நடராஜ், எவர்சில் வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ராயப்பன், செயலாளர் வேலுசாமி, பொருளாளர் மனோகரன் ஆகியோர் மற்றும் திர ளாக தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, காவல்து றையினர் போரட்டத்தில் ஈடுபட்டவர்களை அப் புறப்படுத்தினர். இவ் வேலை நிறுத்தப் போராட் டத்தின் காரணமாக செவ் வாயன்று மட்டும் ரூ.85 லட்சம் வரை உற்பத்தி மற் றும் வர்த்தக இழப்பு ஏற் பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: