தீர்வு காணப்படாமல் முடிந்த வனவிலங்கு தடுப்பு நடவடிக்கை கூட்டம் கோவை, பிப். 15- வால்பாறைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் களை வனவிலங்குகள் தொடர்ந்து தாக்கி வரு வதை தடுப்பது குறித்து கோவையில் நடைபெற்ற கூட்டம் தீர்வு காணப்படா மல் நிறைவு பெற்றது. வால்பாறையில் சமீப காலமாக மனிதர்களை யானைகள், சிறுத்தைகள் தாக்கி கொல்லும் சம்பவங் கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. எனவே, மனித உயிர்களை பாது காப்பு குறித்து தனியார் எ°டேட் நிறுவனங்களு டனான கலந்தாய்வுக் கூட் டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி கூடுதல் ஆட்சியர் சுந்தர் தயாளன், வால்பாறை எம்.எல்.ஏ. ஆறுமுகம், தலைமை வனபாதுகாப்பு அலுவலர் ராஜமுத்தையா, மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு, தாசில்தார் குணாளன் மற்றும் தனி யார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பாதுகாப்பு நடவடிக் கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் பேசும்போது, எ°டேட் தொழிலா ளர்களின் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நட மாடும் பகுதிகளில் மின் விளக்கு அமைக்க வேண் டும். குடியிருப்புகளைச் சுற்றிலும் 10 மீட்டர் தூரத் திற்கு அருகில் உள்ள தேயி லைச் செடிகள் மற்றும் முட்புதர்களை அகற்றி, எ°டேட் நிர்வாகத்தினர் சூரிய மின்வேலி அமைக்க வேண்டும். வனப்பகுதிக்கு அருகில் உள்ள எ°டேட் பகுதிகளில் யானைத் தடுப்பு அகழிகள் அமைக்க வேண்டும். தனியார் தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாகன வழி ஏற்படுத்த வேண்டும். எ°டேட் சாலைகள், தனியார் சாலைகளாக உள்ளது. இங்கு சாலைகள் அமைக் கவும், பராமரிக்கவும் உள் ளாட்சி நிர்வாகத்தின் வசம் சாலைகளுக்கான நிலங் களை ஒப்படைக்க வேண் டும் என்றார். ஆனால், தனியார் தேயிலை தோட்ட நிர்வா கத்தினர்களோ, தொழிலா ளர்களின் குடியிருப்புக ளுக்கு அருகில் உள்ள புதர் களை அகற்ற மட்டும் ஒப் புக் கொண்டனர். வனப் பகுதிகளில் உள்ள எ° டேட் பகுதிகளில் அகழி வெட்ட இயலாது என தெரிவித்து விட்டனர். எ°டேட் வழியாக பேருந் துகள் செல்ல அனுமதிக்கி றோம். ஆனால் சாலை களை உள்ளாட்சி வசம் ஒப்படைக்க மாட்டோம் என்றனர். பள்ளிக்குழந்தை களுக்கான வாகன வச தியைக் கூட எம்.எல்.ஏ. வின் கடுமையான ஆட் சே பணைக்கு பிறகே பார்க் கலாம் என் றனர். ஏதோ, சம்பள பேச்சு வார்த்தையைப் போன்று இந்த கூட்டமும் எந்த முடிவும் எட்டப்படாம லும், அடுத்த கூட்டம் எப் போது என்று தேதி குறிப் பிடாமலும் முடிந்தது.

Leave A Reply

%d bloggers like this: