திருப்பூர் தொழில் வளர்ச்சியில் சரி நிகரான தொழிலாளர்களுக்கு அரசு என்ன சலுகை தந்தது? சிஐடியு பனியன் சங்க மகாசபையில் கே.காமராஜ் கேள்வி திருப்பூர் பிப்15. பின்னாலாடை தொழில் வளர்ச்சியில் சரி நிகராக இருக்கின்ற தொழி லாளர்களுக்கு அரசு இது வரை என்ன சலுகை செய்து கொடுத்திருக்கிறது என பனியன் தொழிலா ளர்கள் மகாசபையில் சிஐ டியு பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் கே.காம ராஜ் கேள்வி எழுப்பினார். பனியன் அன்ட் பொது தொழிலாளர் சங் கத்தின் ஏரியா அளவிலான மகா சபைகள் திங்கள் முதல் தொடங்கியது. திங்க ளன்று வீரபாண்டி, வேலம்பாளையம் ஏரியா மகாசபைக் கூட்டங்கள் நடைபெற்றன. வேலம்பா ளையம் ஏரியா பனியன் மகாசபையில் பங்கேற்ற கே.காமராஜ் மேற்கண்ட வாறு கேள்வி எழுப்பி னார். இதில் மேலும் அவர் பேசியதாவது: தொழிற்சங்கத்தில் தொழிலாளர்கள் உறுப் பினராக சேராமல் இருப் பது அவர்களது அடிப் படை உரிமைகளைப் பாதுகாக்க உதவாது. தற் போது வாங்குகிற பஞ்சப் படி என்பது முதலாளிகள் யாசகமாக கொடுத்தது அல்ல. 1984ல் பனியன் தொழிலாளர்கள் 127 நாட் கள் நடத்திய வீரஞ்செ றிந்த வேலை நிறுத்த போரட்டத்தால் கிடைத் தது. பனியன் உற்பத்தியா ளர்கள் எட்டு மணிநேர வேலை நேரத்தை பத்து மணி நேரமாக மாற்ற முயற்சித்தபோதும், பனி யன் தொழிலை கிராமப் புற வேலைவாய்ப்பு திட் டத்தில் சேர்க்க முயற்சித்த போதும் அதை எதிர்த்து போராடியது சிஜடியு தான். இன்று முதலாளி களுக்கு ஏராளமான சலு கைகளை அரசு வழங்குகி றது. திருப்பூரில் பனியன் முதலாளிகளுக்கு 33 ஆயி ரம் கோடி ரூபாய் வங்கி கள் மூலம் கடனாக கொடுக்கபட்டிருக்கிறது. ஆனால் தொழிற்வளர்ச்சி யில் சரிபாதியாக இருக்கும் தொழிலாளர்களுக்கு அரசு என்ன செய்து கொடுத்திருக்கிறது? பனியன் தொழிலாளர் கள் தங்கள் வருமானத்தில் 30 விழுக்காடு வாடகைக்கு கொடுக்கவேண்டியுள்ளது. அவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி தர வேண்டுமென நாம் நீண்ட காலமாக போராடி வருகிறோம். கோரிக்கைகளை வெல்ல அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் என்று அவர் கூறினார். பனியன் தொழிற்சங்க வேலம்பாளையம் ஏரியா கமிட்டி தலைவராக ஏ.பி. ராஜேந்திரன், செயலாள ராக பாண்டியராஜ், பொருளாராக என்.சுப்பிர மணி, துணைத் தலைவ ராக அ.உமாநாத், துணைச் செயலாளாராக பி.பாபு ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். வேலம்பாளை யம் பனியன் தொழிலாளர் கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். இதேபோல் 14ம் தேதி அவிநாசி ஏரியா கமிட்டி, பி.என்.ரோடு ஏரியா கமிட்டி மகாசபைக் கூட் டங்கள் நடைபெற்றன. 15ம் தேதி ஊத்துக்குளி ஏரியா, பல்லடம் ஏரியா மற்றும் 16ம் தேதி கொங் குநகர், பெருமாநல்லூர் ஏரியாக்கள், 17ம் தேதி காங்கயம் ரோடு, டவுன் ஏரியா, பல்லடம் ரோடு ஏரியா, 19ம் தேதி அவிநாசி ஏரியா, 19ம் தேதி செட்டி பாளையம் ஏரியா மகாச பைக் கூட்டங்கள் அடுத்த டுத்து நடைபெற உள்ளன. இந்த மகாசபைகளில் சிஐடியு மாவட்டத் தலை வர் கே.உண்ணிகிருஷ் ணன், பனியன் சங்கப் பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, செயலாளர்கள் ஜி.சம்பத், எ°.சிவக்கு மார், துணைத் தலைவர் கள் எம்.என்.நடராஜ், ஜெயராமன், பொருளா ளர் வி.நடராஜன் உள்பட சங்க நிர்வாகிகள் பங் கேற்று வருகின்றனர். பனியன் தொழிலாளர் களுக்கான புதிய சம்பள ஒப்பந்தம் சமீபத்தில் நிறை வேற்றப்பட்டிருக்கும் நிலையில் தொழிலாளர் கள் அவற்றை தாங்கள் வேலை செய்யும் கம்பெனி களில் கேட்டுப் பெறவும், தர மறுத்தால் அந்தந்த கம் பெனிகளில் தொழிலாளர் கள் ஒன்று சேர்ந்து பெறவும், சங்கத்தை அணுகவும் மகாசபைக் கூட்டங்களில் தொழிலா ளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. இந்த அனைத்து மகா சபைகளையும் வெற் றிகரமாக நடத்திமுடித்து மார்ச் 8ம் தேதி திருப்பூர் கே.எ°. ஆர்.திருமண மண்டபத்தில் 33வது ஆண்டு தலைமை மகா சபையை நடத்தவும் சிஐ டியு பனியன் தொழி லாளர் சங்கம் முடிவு செய்துள் ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.