தாமஸ் கோப்பை கால் இறுதியில் இந்தியா சீனா மக்காவில் நடைபெறும் தாமஸ்கோப்பை பேட்மின்டன் போட்டிகளின் கால் இறுதியில் இந்திய ஆடவர் அணி நுழைந்துள்ளது. உபர்கோப்பை போட்டிகளில் மகளிர் அணி போராடித் தோற்றது. கடைசி 16 சுற்றில் மகாவ் உடன் இந்தியா ஆடியது. மகாவ் இந்தியாவிடம் 5-0 எனத் தோற்றது. உலகத் தரவரிசையில் உயர் இடத்தில் உள்ள அஜய் ஜெயராம் மகாவ் வீரர் சி மான் லாம் என்பவரை 21-9, 21-11 என வென்றார். இரட்டையர் போட்டியில் சனாவே தாமஸ் – ருபேஷ் குமார் இணை எதிர் இணையான இயோன் வெங்லோ – இயோ கென் லாவோ ஆகியோரை 21-6, 21-2 என்ற புள்ளிகளில் தோற்கடித்தது. பி.காஷ்யப் 21-10, 21-10 என்ற புள்ளிகளில் சி சோங் நக் என்பவரைத் தோற்கடித்தார். மற்றொரு இரட்டையர் ஆட்டத்தில் அட்சய் திவால்கர் – பிரனாவ் சோப்ரா இணை, கினீபாய் லியோங் – சிமான் லாம் இணையை 21-11, 21-13 எனத் தோற்கடித்தது. இளைய நட்சத்திரம் சாய் பிரனீத் 21-5, 21-8 என்ற புள்ளிகளில் ஹோக் மான் லோவைத்தோற்கடித்தார்.

Leave A Reply

%d bloggers like this: