தானே புயலால் ரூ.6 கோடிக்கு சேதம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல் சிதம்பரம், பிப். 15 – விழுப்புரம்- மயிலாடு துறை இடையே சிறப்பு ரயில் மூலம் லெவல்கிரா சிங், ரயில்பாதை பாயிண்ட், மேம்பாலங்கள், சிறய பாலங் கள் மற்றும் ரயில்நிலைய கட்டடம், முன்பதிவு மையம் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிரி ஷன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தானே புயலால் ரயில்வே துறைக்கு ரூ.6 கோடி சேதம் ஏற்பட் டுள்ளது. சீரமைக்கும் பணிக் காக இதுவரை 2.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் தானே புயலால் பாதிக்கப்பட்ட பாதை சீர மைப்புப் பணிகளைதிருச்சி டிவிஷன் துறையினர் விரைந்து முடித்ததற்கு பாராட்டும் தெரிவித்தார். எக்°பிர° ரயில்கள் அனைத்து நிலையத்திலும் நிறுத்த வேண்டும் என்று அதிக அளவில் கோரிக்கை கள் விடுத்துள்ளனர். ஒரு எக்°பிர° ரயிலை 10 முதல் 12 நிலையங்களில்தான் நிறுத்த முடியும். பாதுகாப்பு மற்றும் நேரத்தை கருத்தில் கொண்டு இந்த ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்க ளிலும் நிறுத்த முடியவில்லை என்றார். கடலூர்-திருப்பாதிரிப் புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்த வேண்டும் என்று மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் அருகே திருப்பாதி ரிப்புலியூரை சுற்றி நகரம் விரிவடைந்துள்ளது. நாகார் ஜூனா ஆயில் கார்ப்பரேஷன், பவர் கார்ப்பரேஷன் போன்ற தொழிற்சாலைகள் தொடங்கப் பட்டுள்ளதால் கடலூர்திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்த வேண் டும் என்ற கோரிக்கை பரி சீலனை செய்யப்படும் என் றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: