விளம்பரம்-செய்தி-கேள்விகள் சில நாட்களுக்கு முன்பு ஏடுகளில் வரு மானவரித் துறையின் விளம்பரம் ஒன்று வெளி வந்தது. அதில் 22,52,06,926 தகவல்கள் தங் களுக்கு கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் வங்கி சேமிப் புக் கணக்கில் ரூ.10 லட்சத்துக்குமேல் செலுத் தியவர்கள் 27,50,545; ரூபாய் முப்பது லட்சத் திற்குமேல் மதிப்புள்ள வீடு வாங்கியவர்கள் 6,23,384; கிரெடிட் கார்டில் 2 லட்சத்திற்கு மேல் கையாண்டவர்கள் 15,23,728; இது போக கடன்பத்திரங்களில் ரூ.2 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்தவர்கள் 33,21,695- இப்படி விவ ரங்கள் தரப்பட்டுள்ளன. அதாவது மறைக்காமல் வங்கிக் கணக்கு மூலம் பரிவர்த்தனை செய்தவர் கள் இவர்கள். ஆனால் இதற்குரிய வரியைக் கட்டவில்லை. வருமான வரித்துறை அதற்கான வரியை வசூலிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்தக் கணக்கை பார்க்கும்போது இந்தியா வில் மேல்தட்டில் இருக்கிற சுமார் 20 விழுக் காட்டினர் மத்தியில் அதிகாரபூர்வமாகவே பெருமளவு பணம் புழங்குகிறது. இவை அனைத் தும் சட்டபூர்வமாக – நியாயமாக சம்பாதித்தது தானா என்ற கேள்வியும் எழுகிறது. அதேநேரத் தில் கணக்கில் உள்ளவைதான் இவை. மறு புறம் பெருமளவு சட்டவிரோதமாகவே பணப் புழக்கம் நடக்கிறது என்பதை அரசே அறியும். மத்திய புலனாய்வு கழகத்தின் இயக்குநர் ஏ.பி. சிங் கருப்பு பணம் குறித்து வெளியிட்டுள்ள ஒரு தகவல் அறிக்கையில், சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் வெளிநாடுகளில் உள்ள வங்கி களில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உலவும் இந்தக் கருப்புப் பணத் தில் 40 விழுக்காடு இந்தியர்களுடையது என்று அவர் கூறுகிறார். மேலும் உயரதிகாரிகளுக்கும் ஆளும் அரசியல் வாதிகளுக்கும் லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட பணம் பெருமளவு கருப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். இந்திய வங்கிகளில், இங்குள்ள நிதி நிறு வனங்களில் முதலீடாகவோ வேறுவகையிலோ பற்றுவரவு வைத்திருக்கிறவர்களை விரட்டிப் பிடிக்க முடிகிற அரசு எந்திரத்தால், கடல் கடந்து போனவர்கள் விவரத்தைக்கூட இன்னும் சேகரிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை. ஆளுங்கட்சிக்கும் அதிகார வர்க்கத்திற்கும் சாதாரண ஏழை, எளிய மக்கள் கோடிக்கணக் கான ரூபாய் லஞ்சம் கொடுத்திருக்கவே முடி யாது. பன்னாட்டு நிறுவனங்களும் பகாசுர நிறு வனங்களும் வரம்புமீறி இந்திய மக்களை சுரண்ட – இந்திய வளங்களை கொள்ளை யடிக்க அள்ளிக் கொட்டப்பட்டதுதான் இந்த லஞ்சப் பணம் என்பது வெளிப்படையாகத் தெரியும் உண்மை. ஆக லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, கள்ளப்பணம், கருப்புப் பணம் இவற் றின் ஊற்றுமையமாக இருப்பது எது? மாறி மாறி மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிர°- பாஜக அரசுகள் கடைப்பிடித்த தவறான பொருளாதாரக் கொள்கைகள்; குறிப் பாக உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என் கிற சீரழிந்த பாதை. ஒரு சிறு பகுதி இந்தியர் களை பெரும் கோடீ°வரர்களாகவும், கருப்புப் பண முதலைகளாகவும் மாற்றியிருக்கிறது என் பதும் பெரும்பகுதி மக்களை ஓட்டாண்டி ஆக்கி யிருக்கிறது என்பதும்தான் கடந்த 20 ஆண்டு காலத்தில் கசப்பான அனுபவம். ஆகவே இந்தக் கொள்கையை எதிர்க்காதவரை – மாற்றப் போராடாதவரை, லஞ்சத்தைப் பற்றியும் கருப்புப் பணத்தைப் பற்றியும் மேலோட்டமாகப் பேசு வதும் குரல் கொடுப்பதும் என்ன பயனைத் தந்து விடப் போகிறது? அன்னா ஹசாரேக்கள் கேள்வி கேட் காமல் தோற்ற இடமும் விட்ட இடமும் இதுதானே!

Leave a Reply

You must be logged in to post a comment.