தலித் இளைஞர் சாவில் சந்தேகம்; குற்றவாளிகளை கைது செய்திடுக! கோவை, பிப். 15- தலித் இளைஞரை அடித்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் சுல்தான் பேட்டை அருந்ததியர் வீதியைச் சேர்ந்த செல்வ ராஜ் மனு அளித்துள்ளார். அம்மனுவில் உள்ளதாவது: எனது மகன் பெயர் சதீ°குமார் (வயது-21), தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் பண வசூல் செய்தல் பணியைச் செய்து வந்தான். இந்நிலையில் கடந்த 22ந் தேதியன்று வாரப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். இந் நிலையில் அன்று இரவு 11.30 மணியளவில் எனது மகன் விபத்தில் இறந்து விட்டதாகக் கூறி எங் களை அழைத்துச் சென் றனர். அங்கு சென்று பார்த்த போது என் மகனின் உட லில் காயங்கள் எங்கும் இல்லை. இருசக்கர் வாக னத்திற்கும் அடிபடவில்லை. எனது மகனிடம் உள்ள இரண்டு செல்போன்க ளும், பர்சும் காணவில்லை. எனது மகன் விபத்தில் இறக்கவில்லை கொலை செய்யப்பட்டுள்ளான் என தெரிகிறது. எனவே சந்தே கப்படும் நபர்களை விசா ரித்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து உதவவேண்டும் என அம்மனுவின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது. இம்மனுவை அளிக்க 100க்கும் மேற் பட்ட தலித் மக்கள் வந் திருந்தனர்.

Leave A Reply