டை’ யில் முடிந்த பரபரப்பான போட்டி ரசிகர் கூட்டம் பரப ரப்புடன் காத்திருக்க மலிங்கா வீசிய கடைசிப் பந்தை தோனி ஒற்றைக்கா லில் நின்று தூக்கி அடித் தார். உமேஷ் யாதவும் தோனியும் மூன்று ஓட்டங் களை எடுத்தனர். பந்தை எல்லைக்குச் செல்லாமல் இலங்கை வீரர்கள் தடுத்து விட்டனர். ஆட்டம் ‘டை’ யில் முடிந்தது. இரு அணிக ளும் 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்கள் எடுத்திருந்த தால் ஆட்டம் ‘டை’ யில் முடிந்தது. இரு அணிகளுக் கும் தலா இரண்டு புள்ளி கள் கிடைத்தன. முதலில் ஆடிய இலங்கை அணி ஓட்டங் கள் எடுக்கத் திணறியது. முதல் ஓவரிலேயே தரங்கா ஆட்டமிழந்தார். தில்ஷ னும் விரைவில் வெளியேறி னர். சங்ககரா-ஜெயவர்த் தனே இணை 51 ஓட்டங்க ளைக் குவித்திருந்த போது, சங்ககரா பெவிலியன் திரும் பினார். சண்டிமாலும் ஜெயவர்த்தனேயும் பொறுப்புடன் ஆடி 94 ஓட்டங்களைச் சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை ஓட்டக்குவிப்பு மந்தமா னது. வினய்குமார் 3 விக் கெட்டுகளையும் அஸ்வின் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை 50 ஓவர்களில் ஒன்பது விக் கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்கள் எடுத்தது. நூறாவது சதம் அடிப் பார் என்று காத்திருந்த ரசி கர் கூட்டத்தை டெண்டுல் கர் ஏமாற்றினார். கோலி, ரெய்னா, ரோகித் ஆகி யோர் தேவையின்றி சொதப்பியதுடன் விக் கெட்டையும் இழந்தனர். காம்பீர் பொறுப்புடன் ஆடி, 91 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்த போட்டிக ளில் இருமுறை இவர் 90களில் வெளியேற்றப்பட் டார். காம்பீர் ஆட்டம் இழந் தபோது இந்தியாவுக்கு வெற்றிபெற 59 ஓட்டங்கள் தேவைப்பட்டது. தோனி பொறுப்புடனும் ஆவேச மாகவும் ஆடி 58 ஓட்டங் கள் எடுத்தார். பதான், வினய்குமார் ரன் அவுட் ஆனார்கள். கடைசி ஓவரில் ஒன்பது ஓட்டங் கள் இருந்த வேளையில் தோனியின் ஆட்டத்தால் ஆட்டம் ‘டை’யில் முடிந் தது. தோனி ஆட்ட நாயக னாக அறிவிக்கப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: