செய்தித்துளிகள் உள்நாட்டு பிரச்சனை எழுந்துள்ள சிரியாவில் போர் அல்லது குழப்பத்தைத் தடுக்க வேண்டும் என்பதில் சீனா உறுதியாக உள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் வென் ஜியா பவ் கூறியுள்ளார். அதுதான் சிரியாவைப் பொறுத்த வரை, தற்போதுள்ள பிரதான பிரச்சனையாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த நோக்கத்தை நிறைவேற்று வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு நடக்கும் அனைத்து முயற்சி களுக்கும் சீனா ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்டார். * * * பஹ்ரைன் மக்களின் ஜனநாயக உரிமை கோரும் போராட்டத்திற்கு ஆதரவாக சவூதி அரேபியாவில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். பஹ்ரைன் போராட் டத்தை அடக்குவதற்காக சவூதி அரேபிய ராணுவம் பயன் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலை யில்தான் பஹ்ரைன் மக்களுக்கு ஆதரவாக சவூதி மக் கள் திரண்டிருக்கிறார்கள். தங்கள் நாட்டின் அரசுக்கு எதி ரான போராட்டத்தையும் நடத்திக் கொண்டே, உரிமைப் போராட்டத்தின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் பஹ்ரைன் மக்களுக்கும் ஆதரவு தந்துள்ளனர். * * * இத்தாலியில் சிறைகளின் நிலை பற்றி பரிசீலனை செய்ய, அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. எந்தெந்த வகையான சீர்திருத்தங்களை மேற்கொண்டால், சிறை யில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகிறார்கள். தற்போதுள்ள நிலையில், இத்தாலி சிறைகளில் 45 ஆயிரம் கைதிகளை வைத்திருக்கலாம். ஆனால், நடை முறையில் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவற்றில் இருக்கிறார்கள். அவர்களில் 30 விழுக்காட்டினர், ஒருமுறைகூட நீதி விசாரணையை சந்திக்கவில்லை.

Leave A Reply

%d bloggers like this: