சூரிய ஒளி காரில் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரம் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரிடம் கண்டுபிடிப்பாளர் வாழ்த்து கொச்சி, பிப். 15- உச்சநீதிமன்றத்தின் முன் னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ் ணய்யரின் வீட்டுக்கதவுகள் ஊழலுக்கு எதிராக பிரச்சா ரம் செய்பவர்களுக்காக எப்போதும் திறந்தே இருக் கின்றன. ஊழல் எதிர்ப்புப் போன்ற நல்ல நோக்கத்திற் காக நடைபெறும் எந்தவி தப் பிரச்சாரமும் ஆதர வைப் பெறத்தான் செய்கின் றன. அந்த முன்னாள் நீதிபதி யின் இல்லத்தை நோக்கி அகமது, சூரிய சக்தியில் இயங்கும் காரில் வந்தார். சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வாகன இயக் கத்தில் முனைப்புக் காட்டும் அகமதுக்கு சூரிய அகமது என்ற பொருள்படும் ‘சோலார் அகமது’ என்ற பெயர் உள்ளது. அவரது முழுப்பெயர் சையத் சாஜத் அகமது. சூரிய சக்தியில் இயங் கும் அந்த கார், மிக வித்தி யாசமான வடிவத்தில் காணப்பட்டது. இரு நாற் காலிகள் இருக்கைகளாக வைக்கப்பட்டு இருந்தன. காரின் முன்பகுதியில் சூரிய ஒளியை பெற்று, மின்சாரம் தயாரிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தன. இதேபோன்று பின்பகுதி, காரின் தலைப்பகுதி எல்லா வற்றிலும் காரின் சக்திக் கான சூரிய ஒளித்தகடுகள் அலங்கரித்துக் கொண்டி ருந்தன. சூரிய ஒளியில் பெறப்படும் மின்சாரத்தை சேமித்து வைக்க, மின்கலம் பொருத்தப்பட்டு இருந்தது. அகமதுவை வரவேற்ற வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவ ரது கார் முன்பாக புகைப் படம் எடுப்பதற்காக நின் றார். நீதிபதியை காண அக மது இரண்டு நோக்கங் களுக்காக பெங்களூரில் இருந்து கொச்சி வந்தார். இந் தியாவின் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு உறுதியான ஆதரவை அளிப்பது முதல் குறிக்கோள், மேலும் சூரிய சக்தி பயன்பாட்டை தூண் டுவது அவரது 2வது குறிக் கோள். ஊழலுக்கு எதிராக போராடும் அகமதுவின் சூரிய ஒளியின் காரில், அன் னா ஹசாரே படம் ஒட்டப் பட் டிருந்ததில் வியப்பு இல்லை. குப்பையில் எறியக்கூடிய பொருட்களைக் கொண்டு அகமது, இந்த சூரிய ஒளி காரை உருவாக்கியுள்ளார். அந்தக்குப்பை பொருட் களை ரூ.70 ஆயிரம் விலை யிலும் இதரப் பொருட் களை ரூ.1 லட்சத்திலும் வாங்கி காரை உருவாக்கி யுள்ளார். இந்தக் கார் மணிக்கு 20 கி.மீ. தூரம் செல்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.