சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாடமி விருது புதுதில்லியில் வழங்கப்பட்டது புதுதில்லி, பிப். 15- இலக்கியத்துக் காக வழங் கப்படும் சாகித்ய அகாடமி விருது ‘காவல் கோட்டம்’ நாவலை எழுதிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்க டேசனுக்கு தில்லியில் செவ் வாயன்று வழங்கப்பட்டது. மத்திய அரசின் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டு தோறும் நாட்டில் உள்ள 24 மொழிகளில் வெளியாகும் இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு தமிழில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் -கலைஞர் கள் சங்கத்தின் பொதுச் செய லாளரும், மார்க்சி°ட் கம்யூ னி°ட் கட்சியின் முழுநேர ஊழியருமான சு.வெங்க டேசன் எழுதிய ‘காவல்கோட் டம்’ நாவலுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. விருதுகள் வழங்குவதற் கான விழா செவ்வாயன்று மாலை புதுதில்லி, கோபர் நிக° மார்கில் உள்ள காமனி அரங்கில் நடைபெற்றது. சாகித்ய அகாடமி தலைவர் சுனில் கங்கோ பாத்யாயா, இந்தியாவில் அ°ஸாமிய மொழி, வங்க மொழி, போடா, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங் கணி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, ராஜ°தானி, சம°கிருதம், சந் தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது என ஆங்கில அகர வரிசைப்படி அ°ஸாமி மொழி முதல் உருதுமொழி ஈறாக 24 மொழிகளில் சென்ற ஆண்டு வெளியான இலக்கிய நூல்களில் விருதுகளைப் பெற்ற அனைவருக்கும் இவ்விருது களை வழங் கினார். இவர்களில் சந்தாலி மொழிக்கான விருதினைப் பெற்ற ஆதித்ய குமார் மாண்டி என்பவர்தான் மிகக்குறைந்த வயதில் (39) விருதினைப் பெற் றார். இவருக்கு அடுத்து தமிழ் மொழியில் விருதினைப் பெறும் சு.வெங்கடேசன் (வயது41) குறைந்த வயதின ராவார். முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் சாகித்ய அகாடமி செயலாளர் அக்ரகார கிருஷ்ணமூர்த்தி வர வேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர் களாக புகழ்பெற்ற இந்தி விமர்சகர் நம்வார் சிங், இலங்கையைச் சேர்ந்த சுமதி சிவமோகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். சாகித்ய அகாடமி துணைத் தலைவர் வி°வநாத் பிரதாப் திவாரி நன்றி கூறினார். (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.