சிபிஎம் மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் குமாரபாளையம், பிப். 15- மார்க்சி°ட் கட்சியின் மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றி யம் கோட்டைமேடு பகுதியில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் பி.ராஜா தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.துரைசாமி, ஒன்றியச் செயலாளர் எ°.தனபால் ஆகியோர் விளக்க உரையாற்றினர். இக்கூட்டத்தில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.முருகேசன், பி.ராமசாமி மற்றும் மணிவேல், சக்திவேல், அண் ணாதுரை, பி.ஆறுமுகம், உப்புக்குளம் கோவிந்த ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.