சந்தேகம் சாமிக்கண்ணு திமுக காலத்தில் தீட்டப்பட்ட திட்டங்கள் எல்லாம் அவர்களின் குடும்ப வருவாயைப் பெருக்குவதாகவே அமைந்தன – முதல்வர் ஜெயலலிதா. ச.சா – நீங்க தீட்டுற திட்டங்கள்லாம் பால் விலை, ப° கட்டண, மின் கட்டண உயர்வுன்னு பல குடும்பங்கள சீர்குலைக்குதே…?? * * * பிறருக்கு உதவி செய்யும் பணியைத்தான் ஆர்.எ°.எ°. செய்து கொண்டிருக்கிறது – ஆர்.எ°.எ°. தலைவர் மோகன் பாகவத். ச.சா-குண்டு வெக்குற வேலைக்கும்ல உதவி பண்ணுறீங்க…?? * * * மாணவ-மாணவிகள், நோயாளிகள் என பலதரப்பினரை யும் பாதித்துள்ள இந்தப் பல மணிநேர மின்வெட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம் – திமுக மகளிர் அணி. ச.சா – எதுவுமே தெரியாத மாதிரில்ல கண்டிக்குறீங்க… உங்க பாதைலதான போறாங்க.. * * * காங்கிர° மட்டுமே வளர்ச்சியை உறுதி செய்யும் – காங். பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. ச.சா – யாரோட வளர்ச்சியை…??

Leave a Reply

You must be logged in to post a comment.