கோவையில் சிபிஎம் பெருந்திரள் தர்ணா மாவட்ட மாநாட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் கோவை, பிப். 15- சீரான மின்சார விநியோகம், அனைவருக்கும் குடிமனைப்பட்டா உள்ளிட்ட தீர்மானங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரசை வலி யுறுத்தி கோவையில் பெருந்திரள் தர்ணா போராட் டம் நடந்தது. கோவை மத்திய பேருந்து நிலையம் எதிரில் புத னன்று நடந்த போராட்டத்திற்கு மார்க்சி°ட் கட்சி யின் கோவை மாவட்டச்செயலாளர் வி.இராம மூர்த்தி தலைமை வகித்தார். போராட்டத்தினைத் துவக்கி வைத்து மார்க்சி°ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், கோவை நாடாளுமன்ற உறுப் பினருமான பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.சி.கருணாகரன் நிறை வுரையாற்றினார். பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் கடும் மின் வெட்டிலிருந்த தொழில்துறையினருக்கு விலக்கு அளிக்க வேண்டும் , அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் நிலவகை மாற்றம் செய்து குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்.. உக் கடம், காந்திபுரம் மேம்பாலப்பணிகளை விரைந்து நிறைவேற்றியும், அரசு மருத்துவமனை, காந்திபுரம், உக்கடம், ஹோப் காலேஜ், ரயில் நிலையம் மற்றும் கணபதி உள்ளிட்ட இடங்களில் சுரங்க நடைபாதை களை அமைத்து மாநகரின் போக்குவரத்து நெரிச லுக்கு தீர்வு காண வேண்டும். அரசு பொது மருத்துவ மனையில் நவீன வசதிகளை மேம்படுத்தி, சூப்பர் °பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். வால்பாறை அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். கூடுதல் கட்டண வசூல் செய்யும் தனியார் பள்ளி கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். கோவை மாநகராட்சியில் தேவைக் கேற்ப துப் புரவுப் பணியாளர்களை நியமித்திட வேண்டும். மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட புற நகர்ப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை உடனடி யாக மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மார்க்சி°ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே. வெள்ளிங்கிரி, சி.பத்மநாபன், யு.கே.சிவஞானம், எ°.கருப்பையா, எ°.ஆறுமுகம் உள்ளிட்டோ ரும், செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்குழுச் செயலாளர்கள் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பேர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: