கோடி கோடியாகப் புரளும் வியாபாரத்தில் ஒரு கொத்தடிமைப் பட்டாளம் தமிழ்நாட்டில் எல்.பி.ஜி. பாட்லிங் தொழிற்சாலைகள் 13 உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்து°தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் சார்பாக பாட்லிங் தொழிற்சாலைகள் செயல்படு கின்றன. அதிக லாபம் ஈட்டக்கூடிய இந்த நிறுவ னங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ள னர். இந்த தொழிலாளர்களுக்கு எந்த சட்ட சலுகையும் மத்திய எண்ணெய் நிறுவனங் கள் செய்து தரவில்லை. ஒரு கொத்தடிமைப் பட்டாளம் இந்த நிறுவனங்களில் நிரந்தரமற்றவர்களாக உள்ள னர். கோடிகோடியாகப் புரளும் வியாபாரம் செய்யும் இந்நிறுவனங்கள், அரசின் சட்ட சலுகைகளைத் தர மறுக்கின்றன. இந்நிறுவ னங்களின் சட்டத்தில் ஒப்பந்தத் தொழிலா ளர் முறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்துக்கட்டுதலுக்கான சட்டம் உள்ளது. நிரந்தரத் தன்மையுள்ள வேலைகளில் ஒப்பந்த முறை கூடாது என்று சட்டம் கூறுகிறது. தமிழ்நாட்டில் 10 லட்சம் கே° இணைப்பு கள் உள்ளன. இந்த இணைப்புகளுக்குத் தேவையான சமையல் மற்றும் வணிக கே° சிலிண்டர்களைக் கொண்டு சென்று சேர்க் கும் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கா னவர்கள் நிரந்தரமற்ற ஒப்பந்தக் கூலிகளாக உள்ளனர். இந்நிறுவனத்தில் ஒப்பந்தக் கூலி களை அமர்த்தக் கூடாது என்று ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் கூறுகி றது. மத்திய அரசின் ஆணையும் கூறுகிறது. ஆனால் அதையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு, கொத்தடிமைகள் போல் எந்த பணிப்பலனும் தராமல் ஏமாற்றி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள். ஓப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடுத் துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த கே° பாட்லிங் மையங்களில் 5 ஆயிரம் தொழிலா ளர்கள் பணியாற்றுகின்றனர். கே° சிலிண் டர்களை விநியோகிக்கும் தொழிலாளர்கள் 6 ஆயிரம் பேரும், லாரி டிரைவர்கள், கிளீ னர்கள் என 10 ஆயிரம் பேரும் சட்ட சலுகை கள் கிடைக்காமல் உள்ளனர். இந்தத் தொழில் நிரந்தரமானது; ஆனால் தொழிலாளர்கள் நிரந்தரமற்றவர்கள். ஒரு சிலிண்டரை விநியோகிக்கும் தொழிலாளிக்கு ரூ.8 கூலியாக எண்ணெய் நிறுவனங்கள் தருகின்றன. ஏஜென்சிகளிடம் வேலை பார்க்கும் சப்ளையர்கள் கொண்டு செல்லும் சிலிண்டர்கள் எண்ணெய் நிறுவனங் களுக்குச் சொந்தமானது . அதனால் தொழி லாளிக்கு ஒரு சிலிண்டர் விநியோகிக்க ரூ.8 தரப்படுகிறது. ஒரு சிலிண்டருக்கு ரூ.32 ஏஜெண்ட் கமிசனாக கொடுக்கப்படுகிறது. ஆனால் சிலிண்டர் விநியோகிக்கும் தொழி லாளிக்கு எண்ணெய் நிறுவனம் கொடுக்கும் ரூ.8 – ஐ தனியார் ஏஜென்சிகள் தருவ தில்லை. மாறாக சிலிண்டர் பெறும் வாடிக் கையாளர்களிடம் ரூ.10 முதல் ரூ.20 வரை வசூல் செய்து கொள்ள ஏஜென்சிகள் அனும திக்கின்றன. சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரி டிரைவர்களுக்கும் கிலோ மீட்டருக்கு இவ்வளவு பேட்டா என்று எண்ணெய் நிறுவ னங்களே ஒதுக்குகின்றன. பங்க் ஆப்ரேட்டர் களுக்கு பேட்டா ஒதுக்கப்படுகிறது. இவையும் முறையாக தொழிலாளர் கைக்குச் செல்வ தில்லை. சமையல் கே° சிலிண்டர் விநியோ கம் என்பது ஒரு முக்கியமான வியாபாரமாக மாறிவிட்டது. சமீபத்தில் சில நாட்கள் மங்க ளூரில் இருந்து பாட்லிங் மையங்களுக்கு வர வேண்டிய கே° லாரிகள் வரவில்லை. எண் ணெய் நிறுவனங்களே ஒரு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, பின்னர் விலை யேற்றி மக்களிடம் கொள்ளையடிக்கும் முயற் சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் கோடிக் கணக்கான ரூபாய் லாபம் ஈட்டக் கூடிய இந்த நிறுவனங்களில் பணியாற்றும் கடைக் கோடி தொழிலாளிகளை ஒப்பந்தக் கூலிக ளாக வைத்துள்ளன. இந்நிலையை மாற்ற தொடர்ந்து கூட்டுப் போராட்டங்களை சிஐ டியு சங்கம் நடத்தும். (எண்ணெய் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர் சங்க (சிஐடியு) சிறப்பு மாநாட்டையொட்டி, அதன் மாநிலத்தலைவர் கே.ஆறுமுகநயினார் கூறியதிலிருந்து)

Leave a Reply

You must be logged in to post a comment.